வீட்டுக் கூரை இடிந்து விழுந்து வயதான தம்பதி பலி
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே வீட்டின் மேற் கூரை விழுந்து வயதான கணவன்-மனைவிபரிதாபமாக பலியாயினர்.
காவேரிப்பட்டணம் பகுதியில் முனுசாமி என்பவர் தன் மனைவி சென்னம்மாளுடன் வசித்து வந்தார். வயதானஇந்தத் தம்பதியினர் ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவர்களுடைய வீட்டின் மேற் கூரை திடீரென இடிந்து விழுந்தது.
இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முனுசாமியும், சென்னம்மாளும் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாயினர்.
காவேரிப்பட்டணம் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications