"இந்திராவைப் போல் என்னை சுட்டுக் கொல்வர்": சந்திரிகா புகார்
கொழும்பு:
இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதைப் போலவே தன்னைச் சுட்டுக்கொல்ல இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையின் கண்டி அருகே உள்ள யதிநூவரா என்ற இடத்தில் முன்னாள் அமைச்சரின் நினைவு நாள் கூட்டத்தின்போது சந்திரிகா பேசியதாக "தி சண்டே டைம்ஸ்" வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
அதிபர் பதவிக்குள்ள அதிகாரம் தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தடையாக உள்ளது. அதிபரின் அதிகாரத்தைக் குறைத்து விடும் நிலையில், அசாதாரணமான சூழ்நிலையில் போர்வந்தால் ராணுவத்திற்கு அப்போது உத்தரவிடுவது யார்?
இருந்தாலும் நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு உள்ள பெரும்பான்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னிடம்உள்ள அதிபர் அதிகாரத்தைப் பறிக்க அவர்கள் முயன்று வருகின்றனர்.
பின்னர் இந்திரா காந்தியைக் கொன்றது போலவே என்னையும் சுட்டுத் தள்ள ரணில் அரசு திட்டமிட்டு வருகிறது.
ஆனால் இந்தச் சந்திரிகா பூனைக் குட்டி போல உயிரை விடமாட்டாள். அவர்கள் என்னைத் தாக்கும் போது, என்உயிர் போவதற்கு முன்பே அவர்களில் 500 பேரைச் சாகடித்து விடுவேன் என்று சந்திரிகா கூறியதாக அந்தச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக விடுதலைப்புலிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும்இடையே முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை தாய்லாந்தில் அமைதியாக முடிவடைந்துள்ள நிலையில் சந்திரிகாவின்இந்தப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications