தமிழகத்துக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது

Subscribe to Oneindia Tamil

மாண்டியா:

தமிழகத்துக்குத் தண்ணீர் விடக் கூடாது என்று கூறி மைசூர் மற்றும் மாண்டியாவில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்த வண்ணம்உள்ளன.

மண்டியா சில்வர் ஜூப்ளி பார்க்கில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மண்டியா நகர பிராமணர் சங்கத்தினர் கண்டனஊர்வலம் நடத்தினர். அதே போல மண்டியாவில் உள்ள சங்கர மடத்தில் குடியிருப்பவர்களும் தமிழகத்துக்கு எதிராக கண்டனப்பேரணி நடத்தினர்.

நேற்று மாண்டியாவில் ஒரு தியேட்டர் மீது கல்வீச்சு நடந்தது. இதில் அதன் கண்ணாடிகள் உடைந்தன.

இன்று மைசூரில் மின் லாரி உரிமையாளர்கள் கே.ஆர். சர்க்கிளில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி போக்குவரத்தைத்தடுத்து நிறுத்தினர். தமிழகத்துக்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் போட்டனர்.

பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள் இன்று வகுப்புக்களைப் புறக்கணித்துவிட்டு மத்திய தொலைத்தொடர்பு அலுவலகங்களைமுற்றுகையிட்டனர். இதனால் ஊழியர்கள் பயந்து ஓடினர். இதன் காரணமாக தொலைபேசிச் சேவைகள் சிறிது நேரம்பாதிக்கப்பட்டன.

அதே போல தபால் நிலையங்களும் ஆங்காங்கே முற்றுகைக்கு உள்ளாயின.

மாண்டியாவில் விவசாயிகள் தமிழ்நாட்டைக் கண்டித்து மாட்டு வண்டி ஊர்வலம் நடத்தினர். சில இடங்களில் தமிழகத்தைஎதிர்த்து மண்ணில் புரளும் வினோத போராட்டத்தையும் விவசாயிகள் நடத்தினர்.

இந்தத் தொடர் போராட்டங்களால் மைசூரிலும் மாண்டியாவிலும் தியேட்டர்களில் தமிழ்ப் படங்கள் வெளியிடுவதுநிறுத்தப்பட்டுவிட்டது.

கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளைச் சுற்றி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் இரவு பகலாக அமர்ந்த வண்ணம்உள்ளனர்.

இதையடுத்து மைசூர், மாண்டியாவில் தமிழகப் பதிவு எண் கொண்ட வாகனங்கள் செல்வது அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+