சென்னை, மதுரையை வறுத்து எடுக்கும் வெயில்
சென்னை:
சென்னையிலும் மதுரையிலும் இந்த ஆண்டு இப்போதும் கூட கோடை காலத்தைப் போல வெயில் வறுத்தெடுத்துக்கொண்டிருக்கிறது.
சென்னையில் இந்த அளவுக்கு ஏன் வெயில் அடிக்கிறது என்பதற்கு சென்னை வானிலை ஆராய்ச்சி நிலைய கூடுதல்இயக்குநர் ரமணி விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் கடந்த 10 நாட்களாக கடுமையான வெயில் அடிக்கிறது. கோடை காலத்தையும் மிஞ்சும் அளவுக்குஅனல் காற்றுடன் வெயில் அடித்து வருகிறது.
இதனால் காலை 6 மணிக்கே சுள்ளென்று வெயில் அடிக்கிறது. இரவு 11 மணி வரையிலும் புழுக்கமாக இருக்கிறது.கோடை காலத்தைப் போல மக்கள் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள்.
கோடை காலம் முடிந்த பின்னும் வெயில் கடுமையாக இருப்பதற்கு பகல் நேரத்தில் வீசும் ஈரப்பதமற்ற காற்று தான்காரணம் என்று ரமணி கூறினார். அவர் கூறுகையில்,
வழக்கமாக இது மழைக்காலம். ஆனால் இந்த ஆண்டு மழை இல்லை. மழை இல்லாத நிலையிலும் கூட காற்றில்ஈரப்பதம் அதிகம் இருக்கும். ஆனால் இந்த முறை காற்றில் ஈரப்பதம் இல்லாத நிலையில் வெப்பக் காற்று வீசுவதால்தான் வெயில் கொடுமை அதிகமாக உள்ளது.
வழக்கமாக கடல் காற்று 3 மணிக்கு மேல் குளுமையாக வீசத் தொடங்கும். ஆனால் காற்றில் ஈரப்பதம்இல்லாததால், இரவு 10 மணிக்கு மேல் தான் கடல்காற்று குளுமையுடன் இருக்கிறு. இதனால் தான் இரவு 11 மணிவரையிலும் புழுக்கம் அதிகமாக இருக்கிறது என்றார் அவர்.
அடுத்த மாத இறுதி வரை இந்த நிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு தான் பருவ மழைபெய்யத் தொடங்கும். ஆனால் சென்னையில் வெயில் போகுமா அல்லது கோடை காலமே நீட்டிக்குமா என்பதையாரும் கணிக்கவே முடியாது போலும்.
மதுரையிலும்...
இந்நிலையில் மதுரையிலும் இன்னும் கோடை காலம் முடிந்தது போலவே தெரியவில்லை.
கடந்த ஒரு வாரம் முழுவதுமே அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரியைத் தாண்டியது. இந்தக் கடுமையான வெயில்மதுரை நகர மக்களைக் கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
வீட்டை விட்டு வெளியே தலையைக் கூட காட்ட முடியவில்லை. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் கூடமிகவும் குறைந்து விட்டது. செருப்பு கூட போடாமல் சென்ற பலர் சாலைகளில் நடக்காமல் ஓடிக் கொண்டு தான்இருந்தனர்.
அந்த அளவுக்கு மதுரை வெயில் அந்நகர மக்களை வாட்டியெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வெயில் இன்னும்தொடர்ந்து நீடித்தால் மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பல நோய்களும் மக்களுக்கு ஏற்படக் கூடும்.
கடும் வெப்பம் காரணமாக நிலத்தடி நீர் வற்றி விட்டது. வைகை அணையும் சுத்தமாக வறண்டு விட்டதால் மதுரைமற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள மக்கள் கடும் குடிநீர் பிரச்சனையில் சிக்கியுள்ளனர்.
கோடையின் வெப்பம் எப்போதுமே மதுரையைத் தாக்கி வந்த போதிலும், இந்த ஆண்டு மதுரை மக்கள் கோடைவெப்பத்தால் மிகவும் அதிகமாகத் துவண்டு போயுள்ளனர்.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications