பெங்களூரில் 144 தடையுத்தரவு
பெங்களூர்:
வி.எச்.பி. அழைப்பு விடுத்துள்ள இன்றைய "பாரத் பந்த்"தையொட்டி பெங்களூர் மாநகரில் 144 தடையுத்தரவுபோடப்பட்டுள்ளது. இங்கு மது விற்பனைக்கும் இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்-காந்திநகரில் உள்ள சுவாமி நாராயணன் கோவிலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்துவிசுவ ஹிந்து பரிஷத் இன்று நாடு முழுவதும் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதையடுத்து பெங்களூரில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 12 மணி முதல் நாளை அதிகாலை 12 மணி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றுபெங்களூர் மாநகரப் போலீஸ் கமிஷனர் சங்கிலியானா தெரிவித்தார்.
மேலும் பந்த் நடைபெறுவதையொட்டி இன்று முழுவதும் மது விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே பந்த்தையொட்டி கர்நாடக மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமாக விடுமுறை அளிக்கப்படவில்லை என்றாலும், பள்ளி-கல்லூரிகளுக்குச் செல்லும்மாணவ-மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுவதால் பாதுகாப்பு கருதி விடுமுறைஅளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி-கல்லூரிகளும் மூடப்பட்டன. பெங்களூர் உள்பட அனைத்துஇடங்களிலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன.நகருக்குள் லாரிகள் போக்குவரத்து தடை செய்யப்பட்டுவிட்டது. தனியார் பஸ்கள், வேன்கள் குறைந்தஎண்ணிகையில் இயங்குகின்றன. இதனால் சாலைகளில் போக்குவரத்து அதிகம் இல்லை.
மற்றபடி மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
மாநிலம் முழுவதும் பஸ்கள் ஓடும் என்று கர்நாடக மாநிலப் போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது. அதன்படியேபஸ்களும் இன்று ஓடிக் கொண்டிருக்கின்றன.
இதற்கிடையே பந்த்தையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றம் மிகுந்தபகுதிகளில் ஆயுதமேந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுனகார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராஜஸ்தானில் உஷார் நிலை:
இந்நிலையில் வி.எச்.பி. பந்த்தையொட்டி ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, அம்மாநிலத்திற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் தான்அதிக அளவிலான வன்முறைச் சம்பவங்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இம்மாநிலத்தில் வி.எச்.பி. ஆதரவாளர்கள் மிகவும் அதிகமாக இருப்பதால் பந்த் காரணமாக அங்குபோலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்த மாநிலத்திலிருந்து தான் வி.எச்.பி. இயக்கத்திற்கு ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள்சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் பாதிப்பில்லை:
இதற்கிடையே இன்றைய பந்த் காரணமாக டெல்லியில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
கல்வி-வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கின. போக்குவரத்தும் பாதிக்கப்படவில்லை.
இருந்தாலும் டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆயுதமேந்திய போலீசார்ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-->
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications