நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: கர்நாடகத்துக்குக்கு தமிழகம் மூக்குடைப்பு
பெங்களூர்
காவிரியில் நீர் திறந்து விடாத கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ்களை தமிழகஅரசு அதிகாரிகள் நேரில் வந்து கர்நாடக முதல்வரிடம் தந்து மூக்குடைப்பு கொடுத்தனர்.
தமிழக அரசின் துணைச் செயலாளர் கருணாநிதி, பொதுப்பணித்துறை செயலாளர் சுப்பையா ஆகியோர் இந்தநோட்டீஸ்களுடன் இன்று பெங்களூர் வந்தனர்.
பின்னர் முதல்வர் கிருஷ்ணாவைச் சந்தித்து அவருக்கான கோர்ட் அவமதிப்பு நோட்டீசையும், நீர்பாசனத்துறைஅமைச்சர் பாட்டீலை சந்தித்து ஒரு நோட்டீசையும் நேரில் தந்தனர்.
அடுத்ததாக தலைமைச் செயலாளர் ரவீந்திரா, பாசனத்துறைச் செயலாளர், பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர் ஆகியோரைச் சந்தித்து அவர்களுக்கு கோர்ட் அனுப்பிய நோட்டீஸ்களை நேரில் தந்தனர்.
கர்நாடகத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஏற்ற உச்ச நீதிமன்றம், உங்களுக்குஎதிராக ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்தநோட்டீஸ்கள் கிருஷ்ணா, பாட்டீல் மற்றும் 3 அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது.
இந் நிலையில் இந்த நோட்டீஸ்களை தமிழக அரசும் கொண்டு வந்து கர்நாடக முதல்வர், அமைச்சர்,அதிகாரிகளிடம் நேரில் வந்து தந்து அரசியல் மூக்குடைப்பு கொடுத்துள்ளது. வழக்கமாக இவ்வாறு வழக்கு போட்டமாநிலம் நேரில் வந்து நோட்டீஸை தருவது இல்லை. கர்நாடகத்தை வெறுப்பேற்றவே தமிழகம் இதைச் செய்துள்ளது.
காவிரியில் தமிழகத்திற்கு தினந்தோறும் 1.25 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்குகடந்த 3ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கடந்த 8ம் தேதி கூடிய காவிரி ஆணையமும்தமிழகத்திற்கு தினந்தோறும் 0.8 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், போதை தலைக்கேறிய நிலையில் ஒரு விவசாயி அணையில் விழுந்து இறந்தையடுத்து கபினிஅணையிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறந்துவிடுவதை கர்நாடக அரசு முற்றிலுமாக நிறுத்திவிட்டது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தையும் காவிரி ஆணையத்தையும் கர்நாடக அரசு அவமதித்துவிட்டதாக தமிழகஅரசு உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications