காவிரி கண்காணிப்பு குழு மேட்டூரில் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

மேட்டூர் அணையைப் பார்வையிட காவிரி கண்காணிப்புக் குழுவினர் இன்று டெல்லியில் இருந்து தமிழகம்வந்தனர்.

மத்திய நீர்வளத்துறை செயலாளர் ஆர்.கே. கோஸ்வாமி தலைமையில் இன்று காலை சென்னை வந்த இந்தக்குழுவினர் உடனடியாக 3 ஹெலிகாப்டர்களில் சேலம் விரைந்தனர்.

அங்கிருந்து கார்கள் மூலம் இவர்கள் மேட்டூர் சென்றனர். அங்கு அணையின் நீர் மட்டம், நீர் வரத்து,திறந்துவிடப்படும் நீரின் அளவு, சுற்றுப் பகுதி குடிநீர் தேவை ஆகியவை குறித்து கேட்டறிந்தனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து இந்தக் குழுவினர் மேட்டூர் வந்துள்ளனர். கடந்த வாரம் பிரதமர் வாஜ்பாயின்உத்தரவின்பேரில் மேட்டூர் அணையைப் பார்வையிட வந்த இவர்களுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்புத்தெரிவித்தது. இதையடுத்து அவர்கள் அணையின் நீர் இருப்பைப் பார்வையிடாமலேயே டெல்லி திரும்பினர்.

ஆனால், கர்நாடக அணைகளை பார்வையிட இவர்களுக்கு அந்த மாநிலம் அனுமதி தந்திருந்தது. இதனால்கர்நாடக அணைகளைப் பார்வையிட்டு டெல்லி சென்ற கண்காணிப்புக் குழுவினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர்.

அதில் மேட்டூர் அணையைப் பார்வையிட தமிழக அரசு தங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்றுகூறியிருந்தனர். இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், உடனடியாக தமிழகம் சென்று அணையின் நீர்இருப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்என்றும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து கோஸ்வாமி தலைமையிலான எட்டு பேர் கொண்ட இந்தக் குழுவினர் இன்று காலை சென்னை வந்துசேர்ந்தனர். தமிழக அரசு தலைமைச் செயலாளரான சுகவனேஸ்வரர் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களைவரவேற்றனர்.

பின்னர் காவிரி கண்காணிப்புக் குழுவினர் உடனடியாக 3 ஹெலிகாப்டர்கள் மூலம் சேலம் புறப்பட்டனர்.அங்கிருந்து அவர்கள் கார் மூலம் மேட்டூர் சென்று அணையின் நீர் இருப்பைப் பார்வையிட்டனர்.

அங்கிருந்து இக் குழுவினர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர். அங்கு காவிரிப் பாசனப் பகுதிகளை பார்வையிட்டுவிவசாயிகளிடம் குறை கேட்கிறார்கள். நாளை நாகப்பட்டினம் திருவாரூருர் மாவட்டங்களில் பயிர்களைப்பார்வையிடுகிறார்கள்.

இதையடுத்து நாளை சென்னை திரும்பும் காவிரி கண்காணிப்புக் குழுவினர், தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன்பேச்சு நடத்துவார்கள்.

தமிழகத்தில் ஆய்வு நடத்துவதற்கு இந்தக் கால அவகாசம் போதுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு,கொடுக்கப்பட்ட இரண்டு நாட்கள் போதுமானது தான் என்றும் அதற்குள் எங்கள் பணிகளை முடித்து விடுவோம்என்று கோஸ்வாமி பதிலளித்தார்.

தமிழகம், பாண்டிச்சேரியைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இரண்டு நாள் ஆய்வுக்குப் பின்னர் டெல்லி செல்லும் இக்குழுவினர் கர்நாடக மற்றும் தமிழக அணைகளின் நீர்இருப்பு, பாசனப் பகுதிகளின் நிலைமை குறித்து பிரதமரிடம் 3ம் தேதி அறிக்கை தாக்கல் செய்வார்கள்.

அந்த அறிக்கையின் நகல் உச்ச நீதிமன்றத்தில் வரும் 4ம் தேதி தாக்கல் செய்யப்படும்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+