காஷ்மீர் 3வது கட்டத் தேர்தலில் 41 சதவீத வாக்குப்பதிவு: தீவிரவாதிகள் சுட்டு 9 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஜம்மு:

காஷ்மீரில் இன்று நடந்த 3வது கட்டத் தேர்தலின் போது பல இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 12பேர் வரை கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 41 சதவீத வாக்குகளே பதிவாகின.

காஷ்மீரில் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மூன்றாவது கட்டத் தேர்தல் நடந்தது.

இந்நிலையில காலை சுமார் 6.45 மணிக்கு கத்துவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகரில் போலீஸ் உடையில் வந்தமூன்று தீவிரவாதிகள் ஜம்மு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு சுற்றுலாப் பேருந்தில் கிரனைட் குண்டுகளை வீசிஎறிந்தனர்.

பின்னர் அதே வேகத்திலேயே அந்த பஸ்சை நோக்கித் துப்பாக்கிகளால் சராமாரியாகச் சுட ஆரம்பித்தனர்.அருகிலிருந்த ஆட்டோ ஸ்டாண்டை நோக்கியும் தீவிரவாதிகள் கண்மூடித் தனமாகச் சுட்டனர்.

இதில் அந்த பஸ்சின் கண்ணாடிகள் சுக்கு நூறாக நொறுங்கி அவற்றின் வழியாகப் பாய்ந்த குண்டுகள்பயணிகளின் உடம்புகளைத் துளைத்தன.

இந்தச் சம்பவத்தில் ஐந்து சுற்றுலாப் பயணிகள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர்படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் பின்னர் உயிரிழந்தனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு ராணுவத்தினரும் போலீசாரும் விரைந்து, தீவிரவாதிகள் மீது பதிலடித் தாக்குதலில்ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

ராணுவத்தினரின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத தீவிரவாதிகள் சிறிது நேரத்திலேயே தப்பி ஓட முயற்சித்தனர்.அப்படி தப்பி ஓடும் போது ஒரு கிராமவாசியை அவர்கள் சுட்டுக் கொன்றனர்.

தற்கொலைப் படையைச் சேர்ந்த அந்தத் தீவிரவாதிகளை துரத்திச் சென்ற ராணுவத்தினர் அவர்களில் ஒருவனைச்சுட்டுக் கொன்றனர். மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதற்கிடையே தேர்தல் நடைபெற்ற வேறு சில பகுதிகளிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். சில இடங்களில்வாக்குச் சாவடிகளின் அருகிலேயே தீவிரவாதிகள் வைத்திருந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் இரண்டு மாநிலஅமைச்சர்கள், ஒரு ராணுவ வீரர் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இதனால் இன்றைய தேர்தலின் போது ஆரம்பத்திலிருந்தே வாக்குப் பதிவு மிகவும் மந்தமாக இருந்தது.தீவிரவாதிகளின் அடுத்தடுத்த தாக்குதல்களால் அஞ்சிய மக்கள் வாக்களிப்பதற்குக் கூட வர அஞ்சினர்.

மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சில அமைப்பினர் பந்த்திற்கும் அழைப்பு விடுத்திருந்ததால் வாக்குப்பதிவு மேலும் மந்தமாகியது. காலையிலிருந்து கடும் பதற்றத்துடன் தான் வாக்குப் பதிவு நடந்தது.

அனந்தநாக், புல்வாமா, உதாம்பூர் மற்றும் கத்துவா ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 27 சட்டசபைத்தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 226 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

சுமார் 18 லட்சம் மக்கள் வாக்களிக்க வேண்டிய இன்றைய தேர்தலில் சுமார் 41 சதவீத மக்கள் மட்டுமேவாக்களித்தனர்.

கடந்த மாதம் நடந்த முதல் கட்டத் தேர்தலில் சுமார் 47 சதவீத வாக்குகளும், இரண்டாவது கட்டத் தேர்தலில் 42சதவீத வாக்குகளும் பதிவாகின. இவற்றுடன் ஒப்பிடும் போது இன்றைய மூன்றாவது கட்டத் தேர்தலின் போதுமிகவும் குறைவான அளவிலேயே வாக்குகள் பதிவாகின.

அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் காஷ்மீர்தேர்தலைப் பார்வையிட்டனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+