கிருஷ்ணா அரசை டிஸ்மிஸ் செய்ய வாஜ்பாயிடம் ஜெ. கோரிக்கை
சென்னை:
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருவதால் அரசியல் சட்டப்பிரிவு 356ஐப் பயன்படுத்தி அம்மாநில அரசைக் கலைக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாயிடம் தமிழக முதல்வர்ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்திற்கு காவிரியில் தினமும் 9,000 கன அடி (0.8 டி.எம்.சி.) நீரைத் திறந்து விட வேண்டும் என்று கடந்தவெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்க உத்தரவிட்டது.
ஆனால் அதன் பிறகு ஒரு சொட்டு நீரைக் கூட தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்துவிடவில்லை.
ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தின்தீர்ப்பை மீறியுள்ளது ஜனநாயகத்திற்கே பெரும் அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளது.
இனிமேலும் மத்திய அரசு இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது. அரசியல் சட்டத்தின் 256வதுபிரிவின் கீழ், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பிரதமர் உத்தரவிடவேண்டும்.
இதையும் கர்நாடக அரசு மீறினால் அரசியல் சட்டத்தின் 365 மற்றும் 356 ஆகிய பிரிவுகளைப் பயன்படுத்திகிருஷ்ணா தலைமையிலான கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார்ஜெயலலிதா.
இதற்கிடையே நேற்று பெங்களூரில் கிருஷ்ணா கூறுகையில், என்னுடைய முதல்வர் பதவியே பறிபோனாலும்அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. சிறை செல்வதற்குக் கூட தயாராக இருக்கிறேன். ஆனால்தமிழகத்திற்கு மட்டும் நீர் திறந்து விட முடியாது என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications