"தலித்" என்ற வார்த்தையே தவறானது: சங்கராச்சாரியார்
காஞ்சிபுரம்:
தலித் என்ற வார்த்தையே தவறானது என காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்கூறியுள்ளார்.
அயோத்தி மற்றும் காசியில் சுற்றுப்பயணம் முடித்து விட்டு காஞ்சி திரும்பிய அவர் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
தலித் என்ற வார்த்தையைவிட உயர்ந்த வார்த்தையான ஹரிஜனம் என்பதைப் பயன்படுத்தலாம். ஆனால், தலித்என்ற வார்த்தையை பயன்படுத்தும் அரசியல்வாதிகள் தான் அந்த வார்த்தைக்கேற்ப தாழ்த்தப்பட்ட மக்களைஅப்படியே வைத்துள்ளனர்.
தலித் என்ற வார்த்தைக்கு "ஒதுக்கப்பட்டவர்கள், கீழ்நிலையில் இருப்பவர்கள்" என்று அர்த்தம். அதனால் தான்மகாத்மா காந்தி, ஹரியின் ஜனங்கள் அதாவது ஆண்டவனின் பிள்ளைகள் என்ற அர்த்தம் வரும்படியான ஹரிஜன்என்ற வார்த்தையை உருவாக்கினார்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் உயர்வான நோக்கத்துன் வளர வேண்டும் என்பதற்காக அவ்வாறு அழைத்தார்.
ஆனால் நமது அரசியல்வாதிகள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை வளர்க்கும் எண்ணத்தில் இல்லை. அவர்களைதாழ்ந்த நிலையிலேயே வைத்திருக்க விரும்புகிறார்கள். அதனால் தான் தலித் என்ற வார்த்தையைப் பயன்படுத்திவருகிறார்கள்.
இந்து மதத்தில் ஆதிவாசி என்ற ஒரு பிரிவே இல்லை. நகரவாசிகள், கிராம வாசிகள், வனவாசிகள் என்று தான்உள்ளன. இருந்தாலும் அனைவருமே இந்துக்கள் தான் என்றார் அவர்.
காஞ்சி சங்கராச்சாரியாரின் இந்த வாதம் பெரும் எதிர்ப்பைப் கிளப்பப் போவது நிச்சயம். தங்களை ஹரிஜனங்கள்என்று அழைப்பதை பல தலித் அமைப்புகளே கண்டித்துள்ளன. தங்களை தலித்கள் என்று தான் அழைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications