சென்னை அருகே கன்னடர்கள் என்று நினைத்து தாக்க முயற்சி
சென்னை:
சென்னையில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது வேன் மோதியது. வேனில் இருந்தவர்கள் கன்னடர்கள்என்று நினைத்த பொதுமக்கள் அவர்களைத் தாக்க முயன்றனர்.
ஆனால் அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்த பின்னர் தான் விட்டனர்.
சென்னை கொட்டிவாக்கம் பழைய மகாபலிபுரம் சாலையில் ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. ஒரு வளைவில்அந்த வேன் திரும்பியபோது முன்னாள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் கூடி விட்டனர். வேனில் இருந்தவர்களை கீழே இறங்கக் கூறியபோது அவர்கள்தெலுங்கில் பேசினர்.
ஆனால் அவர்கள் பேசியது கன்னடம் என்று நினைத்த பொதுமக்கள், எங்களுக்குத் தண்ணீர் தர மறுக்கும்கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களா நீங்கள் என்று ஆவேசமாகக் கேட்டபடி தாக்க முயன்றனர்.
ஆனால், தாங்கள் ஆந்திரவைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய பின்னர் தான் தாக்குதல் முயற்சியை கைவிட்டுஅவர்களிடம் மன்னிப்பு கோரினர்.
அதன் பின்னர் அந்த வேனை புறப்பட்டுச் செல்லவும் பொதுமக்கள் அனுமதித்தனர்.
தமிழகத்தில் முதன்முதலாக கன்னடர்களுக்கு எதிரான தீவிரப் போக்கு வெளிப்பட்டுள்ளது.
ஆனால், இது சரியானதல்ல. தமிழகத்தில் இதுவரை இன துவேஷத்துக்கு இடம் இருந்தது இல்லை. இனியும் இடம்தருவது சரியல்ல.
கன்னடர்களாகவே இருந்திருந்தாலும் அவர்களைத் தாக்குவது மிகவும் தவறான செயல் என்பதை நாம் உணரவேண்டும். ஒரு அரசும், அரசியல்வாதிகளும், கன்னட நடிகர்களும், கன்னட வெறியர்களும் செய்யும் தவறுக்காகஅப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்கள் தமிழர்களாகிய நமக்கு அழகல்ல.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications