அரசு கல்லூரி ஆசிரியர்கள் ஸ்டிரைக் தொடங்கியது
சென்னை:
அரசுக் கல்லூரி ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை தொடங்கியது.
பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகளை இணைக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்திஆசிரியர்களும், மாணவர்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை தமிழகத்தில் உள்ள 67 அரசுக் கல்லூரி ஆசிரியர்களும் காலவரையற்ற ஸ்டிரைக்கைத்தொடங்கினர்.
ஆசிரியர்கள் அனைவரும் பணிக்குச் செல்லாமல் கல்லூரி வளாகங்களில் போராட்டம் செய்து வருகின்றனர். பலகல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இன்று மாலை அனைத்து அரசுக் கல்லூரி ஆசிரியர்களும் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் ஊர்வலம்செல்கின்றனர். இதேபோலவே தினமும் அவர்கள் போராட்டம் நடத்துவார்கள்.
பின்னர் வரும் 16ம் தேதி முதல் 17ம் தேதி வரை அரசுக் கல்லூரி வளாகங்களில் உண்ணாவிரதப் போராட்டம்நடைபெறும்.
இதுதவிர வரும் 18, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சென்னை, மதுரை, கோவை, வேலூர், சேலம், திருச்சி, கடலூர்,தஞ்சாவூர் ஆகிய இடங்களிலுள்ள மண்டல கல்லூரி இயக்குநர் அலுவலகங்களில் முற்றுகைப் போராட்டம்நடைபெறும் என்றும் ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
மாணவர்களின் ஒப்பாரி போராட்டம்:
இதற்கிடையே திருச்சி அரசு பெரியார் கல்லூரி மாணவர்கள் நேற்று ஒப்பாரிப் போராட்டம் நடத்தினார்கள்.
திருச்சி ஈ.வே.ரா. பெரியார் அரசுக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் கூடி ஒப்பாரி வைத்தும், பாடையில்மாணவர்கள் படுத்திருப்பது போலவும் நூதனமான முறையில் போராட்டம் நடத்தினார்கள்.
இதேபோல, பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களும் உண்ணாவிரதப் போராட்டம்நடத்தினார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications