கர்நாடகத்தில் அரசியல் மோதல்: பாத யாத்திரையை வாபஸ் பெறும் கிருஷ்ணா
பெங்களூர்:
காவிரியை வைத்து அரசியல் லாபம் தேட கர்நாடக முதல்வர் கிருஷ்ணா நடத்தி வரும் யாத்திரைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள்மற்றும் விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அதை நிறுத்திக் கொள்ள கிருஷ்ணா முடிவு செய்துள்ளதாகத்தெரிகிறது.
இது குறித்து தனது கட்சியின் தலைவர்களுடன் அவர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
எதிர்க் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே கர்நாடக முதல்வர் கிருஷ்ணா தனது அரசியல்பாதயாத்திரையை இன்று இரண்டாவது நாளாகத் தொடர்ந்தார்.
ஆனால், இந்த யாத்திரை மூலம் தனது அரசியல் செல்வாக்கை அதிகரிக்க கிருஷ்ணா முயல்வதாகவும் அதை உடனே நிறுத்தவேண்டும் எனவும் விவசாய சங்கங்கத்தின் தலைவர் மாடே கெளடா கூறினார். இன்று கிருஷ்ணாவை பாத யாத்திரையின்மத்தியில் சந்தித்த மாடே கெளாட இனி உங்களுக்கு ஆதரவு தர முடியாது என்று கூறிவிட்டுச் சென்றார்.
அதே போல கிருஷ்ணாவின் யாத்திரைக்குப் போட்டியாக தானும் ஒரு இயக்கம் நடத்தப் போவதாக முன்னாள் பிரதமரும்மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவெ கெளடா இன்று அறிவித்தார்.
இனி கிருஷ்ணா கூட்டம் கூட்டங்களில் கண்ணை மூடிக் கொண்டு பங்கேற்க மாட்டோம் என பா.ஜ.கவும் அறிவித்துள்ளது.
இதுவரை காவிரி விவகாரத்தில் தனக்கு முழு ஆதரவு தந்த கட்சிகளும் விவசாய சங்கங்களும் தன்னை விட்டு விலகுவதால்கலவரமடைந்துள்ளார் கிருஷ்ணா.
மேலும் கர்நாடகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீவிர நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் பிறகட்சிகளின் ஆதரவு இல்லாவிட்டால் பிரச்சனையில் சிக்குவோம் என்பதை உணர்ந்த கிருஷ்ணா தனது பாத யாத்திரையை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளார்.
பெரும்பாலும் நாளை இந்த யாத்திரை கைவிடப்படும் என்று தெரிகிறது.
காலை தொடங்கிய யாத்திரை:
முன்னதாக இன்று காலை எதிர்ப்புகளை ஒதுக்கித் தள்ளிவிட்ட கிருஷ்ணா பிதாதி என்ற இடத்தில் இருந்து தனது யாத்திரையைஇன்று துவக்கினார். நேற்று பெங்களூரில் இருந்து புறப்பட்ட அவர் பிதாதியில் இரவு தங்கினார்.
இன்று அவர் ராமநகரம் வரை நடப்பார். அவருடன் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் அமைச்சர்களும் இந்தயாத்திரையில் பங்கேற்றுள்ளனர். யாத்திரை நடந்த இடங்களில் எல்லாம் பதற்றமும் பற்றிக் கொண்டது. பல இடங்களிலும் அச்சம்காரணமாக கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன.
வழியில் விவசாயிகளிடையே பேசிய கிருஷ்ணா, உங்களுக்காக எந்த தியாகத்துக்கும் நான் தயார் என்றார்.
ஆனால், இப்போது பிரச்சனை முற்றுவதால் யாத்திரையை கைவிட முடிவு செய்துள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications