ஒப்பந்தங்களை மீறுவதே கர்நாடகத்துக்கு பிழைப்பாகிவிட்டது: பன்னீர்செல்வம்
சென்னை:
காவிரி தொடர்பாக 1924ம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை கர்நாடகம் தொடர்ந்து மீறி வந்துள்ளதாகபொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரியைப் பொறுத்த வரை அனைத்துத் திட்டங்களையும் தமிழக அரசு உரிய அனுமதி பெற்றுத்தான் நிறைவேற்றியது. மத்தியஅரசிடமும், திட்டக் கமிஷனிடம் பேசாமல், அனுமதி பெறாமல் எந்தத் திட்டத்தையும் தமிழகம் அமலாக்கியதில்லை.
ஆனால், கர்நாடகம் இதுவரை எந்த ஒப்பந்தங்களையும் மதித்தது இல்லை. 1924ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைமீறி 3 அணைகளைக் கட்டியது கர்நாடகம்.
1924ம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி பாசனப் பரப்பை தமிழகம் அதிகரித்து பிராட் செய்துவிட்டதாக கர்நாடக பாசன அமைச்சர்பாட்டீல் கூறியிருக்கிறார். பிராட்தனம் செய்தது கர்நாடகம் தான். நாங்கள் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் காவிரி பாசனப்பகுதியில் ஒரு சிறிய திட்டம் கூட நிறைவேற்றியது கிடையாது.
ஆனால், ஒப்பந்தத்தை மீறி ஹேமாவதி, ஹாரங்கி, கபினி ஆகிய அணைக்கட்டுகளை கர்நாடகம் கட்டியது. இதை பாட்டீல்தனக்கு வசதியாக மறந்துவிட்டார். இந்த அணைகளை கட்டும் முன் மத்திய அரசிடமும், தமிழகத்திடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறின கர்நாடக அரசுள்.
தேசிய சொத்தான காவிரியை சட்ட விரோதமான அணை கட்டி நீரைத் தேக்கிக் கொண்டு இப்போது வாய் ஜாலம் செய்யகர்நாடகத்துக்கு எந்த அருகதையும் இல்லை.
அண்டை மாநிலத்து விவசாயிகளின் வயிற்றில் அடித்துவிட்டு அதை ரசிக்கும் கர்நாடகம் தொடர்ந்து தமிழகத்தைப் பற்றிஅவதூறு பேசுவது நல்லதல்ல.
முதலில் வாயைக் கட்டுப்படுத்திக் கொள்ள கர்நாடக அமைச்சர் கற்றுக் கொள்ள வேண்டும்.
காவிரி கர்நாடகம் வழியாக தமிழகத்துக்கு வருவதால் தமிழகம் தான் அடங்கிப் போக வேண்டும் என்று நினைத்தால் அதுநடக்காது. தமிழகம் தனது உரிமையைக் கோருகிறது.
ஆனால், கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அலட்சியப்படுத்தி பக்கத்து மாநிலத்தின் உரிமைகளைப பறிக்கமுயல்கிறது.
நேர்மையும் நியாயமும் இல்லாத கர்நாடகத்தை கண்டிக்க வார்த்தைகளே இல்லை.
இவ்வாறு தனது அறிக்கையில் பன்னீர் கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications