பாண்டிச்சேரியிலும் நாளை பந்த்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரிக்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி அம்மாநிலத்திலும்நாளை (புதன்கிழமை) பந்த் நடைபெறுகிறது.
காவிரிப் பிரச்சனை தொடர்பாக பாண்டிச்சேரியிலும் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து கர்நாடக அரசை வலியுறுத்தக் கோருவது என்று இந்தஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அதற்குப் பின்னர் தான் காவிரிப் பிரச்சனை தொடர்பாக சென்னையில் கூடிய தமிழக அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் நாளை தமிழகத்தில் பந்த் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று இரவு பாண்டிச்சேரியில் மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்திற்குப் பின்னர் பாண்டிச்சேரி அதிமுக செயலாளர் நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் நாளை பந்த் நடத்த அனைத்துக் கட்சிகளும் முடிவு செய்திருப்பதைத் தொடர்ந்து, பாண்டிச்சேரியிலும்நாளை பந்த் நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரி மக்கள் அனைவரும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து அது முழு வெற்றிஅடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
பந்த்தையொட்டி நாளை மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அனைத்து தரப்பு மக்களும் பந்த்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாண்டிச்சேரி காங்கிரஸ் தலைவரானநாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளை பந்த் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டிருந்தாலும், ஏற்கனவே எடுத்த முடிவின் அடிப்படையில்கர்நாடகத்திலிருந்து பாண்டிச்சேரிக்கு உரிய காவிரி நீரை பெற்றுத் தரக் கோரி பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமிதலைமையில் அனைத்துக் கட்சிக் குழு வாஜ்பாயைச் சந்தித்து வலியுறுத்த முடிவு செய்துள்ளது.
அனைத்துக் கட்சிக் குழுவுடன் டெல்லி சென்று வாஜ்பாயை சந்தித்து காரைக்கால் பகுதிக்கு உரிய காவிரி நீரைதிறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு உத்தரவிடக் கோரி மனு கொடுப்பது என்று நேற்றைய அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றும் பிரதமர் வெளிநாட்டுப் பயணம் முடிந்து திரும்பியவுடன் டெல்லி செல்லமுடிவு செய்யப்பட்டது என்றும் ரங்கசாமி கூறினார்.
இதற்கிடையே காரைக்கால் பகுதிக்கு காவிரியில் உடனடியாக நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசைவலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இன்று அடையாள உண்ணாவிரம் இருந்தனர்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications