கருணாநிதி-ரஜினி- விஜய்காந்த்: திடீர் கூட்டணி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நெய்வேலியில் நடக்கும் திரையுலகினரில் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று திமுக நடிகர்களுக்கு அதன்தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

அதே போல பல நடிகர்களும் நெய்வேலி வரத் தயங்குவதாக விஜய்காந்த்துகும் கூறியுள்ளார்.

இதன்மூலம் இந்தப் போராட்டத்தில் இருந்து திமுகவும் விஜய்காந்த் தலைமையிலான ஒரு பிரிவு நடிகர்களும் ஒதுங்கிக்கொள்வார்கள் என்று தெரிகிறது.

இன்று கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நெய்வேலியில் 2வது மின் உற்பத்திப் பிரிவுக்குள் நுழைந்து போராட்டம் நடத்துவோம் என்று பாரதிராஜா கூறியிருக்கிறார்.ஆனால், அதற்கு போலீஸ் அனுமதி தரவில்லை. வெளியில் தான் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால்,தடையை மீறி போராட்டம் நடக்கும் என்கிறார் பாரதிராஜா.

இதனால் அங்கு பெரும் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளது. இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை. இதன் காரணமாகஅந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என திமுகவைச் சேர்ந்த நடிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். அமைதியாக நடக்கும்என்பதால் தான் முதலில் அவர்களுக்கு அனுமதி தந்தேன். இப்போது அந்த அனுமதியை திரும்பப் பெறுகிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

முதலில் இந்தப் போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்த கருணாநிதி, திமுக நடிகர்கள் பங்கேற்பார்கள் என்றார். இப்போது நிலைதடுமாறியிருக்கிறார்.

கருணாநிதியின் இந்த அறிவிப்பு காரணமாக சரத்குமார், சந்திரசேகர், ராதிகா, தியாகு, நெப்போலியன் உள்ளிட்ட நடிகர்கள் இந்தப்போராட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிகிறது. சரத்குமார் திமுக எம்.பியாக உள்ளார். முரசொலி மாறனுக்கு உடல் நிலைபாதிக்கப்பட்டுள்ளதால் அவரை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக்கிவிட்டு திமுக சார்பில் வேறு ஒருவரை அமைச்சராக்கயோசிக்கப்பட்டு வருகிறது.

சரத்குமாருக்கு இந்தப் பதவி கிடைக்கலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது. மேலும் சரத்தின் மனைவி ராதிகாவின் ராடன் டிவிநிறுவனம் சன் டிவியில் தான் தனது நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதனால் சரத் விலகிக் கொள்ள நிறைய வாய்ப்புகள் உள்ளன.

விஜய்காந்த்தின் லண்டன் பல்டி:

திமுக இப்படி என்றால் விஜய்காந்த் அடித்துள்ள பல்டி தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. லண்டன் பயணத்தை பாதியிலேயேமுடித்துக் கொண்டு ஊர் திரும்புவதாக பத்திரிக்கைளுக்கு தனது ஆட்கள் மூலம் செய்தி தந்து பரபரப்பை ஏற்படுத்தினார்விஜய்காந்த்.

இன்று நிருபர்களிடம் பேசிய அவர், நான் இங்கு வந்தவுடன் அனைத்து நடிகர்களுடனும் தனித்தனியே பேசினேன்.அனைவருமே நெய்வேலி செல்ல தயக்கம் தெரிவிக்கின்றனர். ஏதாவது வன்முறை நடக்கலாம் என்ற அச்சம் தெரிவிக்கின்றனர்.

நாமும் கர்நாடகமும் மோதிக் கொள்ள இது என்ன இந்தியா- பாகிஸ்தான் சண்டையா?

நெய்வேலிக்கு யார் யார் வருகின்றனர், யார் யார் வரவில்லை என்பதை தெளிவாகச் சொல்ல மறுக்கின்றனர். இதனால் மீண்டும்அனைத்து நடிகர்களுடனும் தனிப்பட்ட முறையில் பேசிவிட்டு முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திப்பேன்.

அதன் பின்னர் தான் நெய்வேலி போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து நடிகர் சங்கம் எந்த முடிவும் எடுக்கும் என்றார்.

மலேசியா, சிங்கப்பூரில் பாட்டு பாடி காசு கேட்க மட்டும் அனைத்து நடிகர்களும் வந்தே ஆக வேண்டும் என்று உத்தரவுபோட்டவர் இந்த கேப்டன் பிரபாகரன். இப்போது தமிழர்களுக்காக போராட்டம் என்றால் நடிகர்கள் சொல்வதைத் தான்கேட்பாராம்.

ரஜினி, கருணாநிதி, விஜய்காந்த் கூட்டு?:

இந்த விவகாரத்தில் ரஜினி, கருணாநிதி, விஜய்காந்த் இடையே ஏதோ ஒரு அண்டர்ஸ்டான்டிங் ஏற்பட்டுவிட்டதாகவே கருதத்தோன்றுகிறது.

தனது நிலையைப் புரிந்து கொண்ட கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பதாக இன்று காலை தான் ரஜினி தெரிவித்தார். அதையடுத்துகருணாநிதியின் பல்டி அறிக்கை வந்தது. ரஜினி கலந்து கொள்ளாத நெய்வேலி போராட்டத்தில் திமுக நடிகர்கள் கலந்து கொள்ளவேண்டாம் என கருணாநிதி உத்தரவிட்டார்.

முதலில் ரஜினியை போராட்டத்துக்கு அழைத்ததாகவும் அவர் வர மாட்டேன் என்று கூறியதாகவும் தெரிவித்த விஜய்காந்த்,இப்போது தானும் பிற நடிகர்களும் இந்தப் போராட்டத்துக்குப் போவதே சந்தேகம் தான் என்பது போல பேசியுள்ளார்.

இந்த விவகாரத்தில் ரஜினியைவிட அதிகம் பல்டி அடித்தவர் என்ற பெருமையை விஜய்காந்த் பெற்றுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் கருணாநிதி- ரஜினிகாந்த்- விஜய்காந்த் இடையே ஏதோ ஒரு அண்டர்கிரவுண்ட் அண்டர்ஸ்டான்டிங்வந்துவிட்டதையே இவர்கள் மூவரது பேச்சுக்களும் உணர்த்துகின்றன.

ஆனால், விஜய்காந்தைப் பொறுத்தவரை ஜெயலலிதா சொல்வதை ஏற்றுக் கொண்டுவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+