பந்த் ஆதரவு: கைதிகள் உண்ணாவிரதம்
கோயம்புத்தூர்:
காவிரியில் நீர் விடாத கர்நாடக அரசைக் கண்டித்து கோவை மற்றும் பாளையங்கோட்டை சிறைகளில் இன்று ஆயிரக்கணக்கான கைதிகள்இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
கோவை சிறையில் மொத்தம் உள்ள 2,060 கைதிகளில் முதியவர்கள், பெண்கள் மற்றும் அல்-உம்மா கும்பல் தவிர மற்ற கைதிகள்அனைவரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை உணவை அருந்த மறுத்த அவர்கள், மதிய உணவையும் புறக்கணித்துவிட்டனர்.
இதேபோல் காவிரியில் நீர் விடாத கர்நாடக அரசைக் கண்டித்து பாளையங்கோட்டை சிறையிலும் ஏராளமான கைதிகள் உண்ணாவிரதம்இருந்தனர்.
தமிழகத்திற்கு ஆதரவாக சிறைக் கைதிகளும் கூட உண்ணாவிரதம் இருந்தது ஜெயில் அதிகாரிகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
12 ம் தேதியும்....
இதற்கிடையே தமிழ் திரையுலகினர் வரும் 12ம் தேதி நெய்வேலியில் நடத்தவுள்ள முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழர் தேசிய இயக்கம்உள்ளிட்ட தமிழ் தீவிர அமைப்புகளைச் சேர்ந்த கைதிகள் சிறைகளிலேயே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழர் தேசிய இயக்கம், தமிழர் விடுதலைப் படை, தமிழ் மீட்சிப் படை உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பாவாணன், மாறன், முத்துக்குமார், இனியன், ஏழுமலை,செல்வம், சத்தியமூர்த்தி ஆகியோர் பொடா உள்ளிட்ட பல வழக்குகளில் கைதாகி பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்களின் ஒருவரான சத்தியமூர்த்தி சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நிருபர்களிடம் கூறுகையில்,
பல்வேறு சிறைகளில் நாங்கள் அடைக்கப்பட்டிருந்தாலும், தமிழ் திரையுலகினர் வரும்12ம் தேதி நெய்வேலியில் நடத்தவுள்ள போராட்டத்திற்கு நாங்கள் முழுஆதரவு அளிக்கிறோம்.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாங்கள் அனைவருமே அன்றைய தினம் சிறைகளுக்குள்ளேயே உண்ணாவிரதப் போராட்டம்நடத்துவோம்.
மேலும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் இன உணர்வுள்ள அனைவரும் அன்றைய தினம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications