உச்ச நீதிமன்றத்துக்கு கிருஷ்ணா மீண்டும் சவால்

Subscribe to Oneindia Tamil

ராமநகரம்:

தமிழகத்துக்கு தண்ணீர் விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்க முடியாது. இதனால் ஏற்படும் எந்தச் சவாலையும்சந்திக்கத் தயார் என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணா மீண்டும் திட்டவட்டமாகக் கூறினார்.

தமிழகத்துக்கு எதிராக காவிரி பாத யாத்திரை நடத்தி வரும் அவருக்கு எதிர்க் கட்சிகளின் ஆதரவு கிடைக்கவில்லை. மேலும்விவசாய சங்கங்களும் இதை எதிர்க்கின்றன.

தனக்கு மட்டும் அரசியல் லாபம் தேடிக் கொள்ள அவர் முயல்வதாக எதிர்க் கட்சிகளும் விவசாய சங்கத்தினரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து தனது பாத யாத்திரையை கைவிட நேற்று கிருஷ்ணா முடிவு செய்தார். ஆனால், இந்த யாத்திரைக்கு மக்கள் மத்தியில்நல்ல ஆதரவு கிடைத்துள்ளதால் அதைக் கைவிட வேண்டாம் என நேற்று இரவு காங்கிரஸ் தலைவர்கள் அவருக்குஅறிவுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து யாத்திரையை அவர் தொடர்ந்து வருகிறார். ஆனால், அதே நேரத்தில் விவசாய சங்கத்தினரின் கோபத்தையும்விரும்பாத கிருஷ்ணா வரும் சனிக்கிழமையுடன் தனது யாத்திரையை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

இந் நிலையில் இன்று ராமநகரத்தில் நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணா,

உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக கடந்த 54 ஆண்டுகளில் கர்நாடகத்தில் எந்த அரசும் இப்படிப்பட்ட முடிவை எடுத்தது இல்லை.நான் சட்டத்தை மதிக்கிறேன். ஆனால், நீரைத் திறந்துவிட்டால் கர்நாடகத்தில் பெரும் வன்முறை வெடிக்கும்.

இதனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த முடியாத நிலையில் உள்ளேன்.

இதனால் ஏற்படும் எந்த சவாலையும் சந்திப்போம். இந்தப் பிரச்சனைக்கு இப்போதைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்பில்லை. மழைபெய்தால் மட்டுமே நிலைமை சீராகும். மழை தான் இரு மாநிலங்களுக்கு இடையே நிலைமைையை சீராக்க முடியும்.

எதிர்காலத்தில் இரு மாநில விவசாய அமைப்பினரும் பேசி பயிர் விளைச்சல் குறித்தும் நீரை பயன்படுத்துவது குறித்தும் ஒருவரைமுறையை உருவாக்க வேண்டும்.

ஆனால், தமிழக அரசு தொடர்ந்து கர்நாடகத்துக்கு எதிராக தீவிரமான நிலையை எடுக்கின்றன என்றார் கிருஷ்ணா.

முன்னதாகவரும் 15ம் தேதி வரை யாத்திரை நடத்தத் திட்டமிட்டிருந்த கிருஷ்ணா எதிர்ப்பு காரணமாக அதை 12ம் தேதி முடித்துக்கொள்கிறார்.

வரும் 12ம் தேதி மாண்டியாவில் தனது யாத்திரையை முடிக்கும் கிருஷ்ணா அங்கிருந்து கார் மூலம் கிருஷ்ணராஜ சாகர்அணைக்குச் சென்று விவசாயிகள், மக்கள் மத்தியில் உரையாற்றுவார் என மாநில காங்கிரஸ் தலைவர் அல்லம் வீரபத்ரப்பாதெரிவித்தார்.

யாத்திரை செல்லும் வழியெல்லாம் மக்களிடையே பேசி வரும் கிருஷ்ணா, உங்களுக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயார்என்கிறார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எக்காரணம் கொண்டும் ஏற்று தமிழகத்துக்கு நீர் விட மாட்டோம் என்று சொல்லி வருகிறார்கிருஷ்ணா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+