ரஜினி ஒரு கருப்பு ஆடு: பாரதிராஜா சாடல்
சென்னை:
தமிழ்த் திரைப்பட உலகில் கருத்து வேறுபாடு ஏற்பட ரஜினி காரணமாக அமைந்து விட்டார். அவர் ஒரு (blacksheep) கருப்பு ஆடு என்று இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில்,
நெய்வேலியில் நடக்கும் போராட்டம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும். அதில் சந்தேகமே இல்லை. ஆனால்ரஜினி நடத்தும் போராட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. நிச்சயம் அது எங்களுடையபோராட்டத்திற்குப் போட்டியானதல்ல, போட்டியாகவும் இருக்க முடியாது.
கர்நாடகத்தில் திரையுலகினர் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ரவிச்சந்திரன் போன்ற தமிழர்களால் அங்குபிரச்சினையை, பிளவை உருவாக்க முடியாது. அவர் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யவில்லை.
ஆனால் நான் பிரித்துக்காட்டுகிறேன் என்று ரஜினி கங்கனம் கட்டிக் கொண்டு தனியாக உண்ணாவிரதம்இருக்கிறார். இதன் மூலம் தமிழ்த் திரையுலகை உடைக்க நான் இருக்கிறேன் என்று அவர் கர்நாடகத்திற்கு மெசேஜ்கொடுக்கிறார்.
தமிழ் திரையுலகை சிதறடிக்கும் முயற்சியில்தான் அவர் ஈடுபட்டுள்ளார். தமிழர்கள் ஒற்றுமையை சிதறடித்துகர்நாடகத்துக்கு உதவும் ரஜினியை கர்நாடக முதல்வர் வாழ்த்துகிறார்.
அதே காவிரிக்காகத்தானே நாங்களும் அமைதியாக போராடுகிறோம். எங்களை வாழ்த்துவதை விட்டு விட்டுரஜினிக்கு மட்டும் என்ன வாழ்த்து? ரஜினி ஒரு கருப்பு ஆடு.
ரஜினியின் போராட்டம் காவிரி விடாத கர்நாடகத்தை எதிர்த்தா அல்லது கர்நாடகத்திற்கு எதிராக நாங்கள்நடத்தும் போராட்டத்தை எதிர்த்தா என்று தெரியவில்லை.
ரஜினி நடத்தும் உண்ணாவிரதத்தில் கண்டிப்பாக நான் கலந்து கொள்ள மாட்டேன்.
கலைஞர் கருணாநிதியும் மிகவும் கீழ்த்தரமான அரசியலுக்குப் போய்விட்டார். இதில் அரசியலுக்கே இடம் இல்லை.நெய்வேலி போராட்டம் வெற்றிகரமாக நடந்து விட்டால் அது ஜெயலலிதாவுக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்து விடும் என்று நினைத்து சரத்குமார், நெப்போலியன் ஆகியோரை போக வேண்டாம் என்று கூறினார்.
ஆனால், தங்கள் தலைவரோடு சேர்த்து தங்களையும் மக்கள் ஒதுக்கி விடுவார்கள் என்ற காரணத்தால்போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக இந்த நடிகர்கள் அறிவித்துள்ளனர் என்றார் பாரதிராஜா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications