பாரதிராஜாவுடன் மோதிக் கொண்டே புறப்பட்ட சரத், போகாத ராதிகா, கழன்று கொண்ட டி.ராஜேந்தர்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை இயக்குனர் பாரதிராஜா கடுமையாக விமர்சித்ததற்கு நடிகர் சரத்குமார் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
இன்று காலை நெய்வேலிக்கு புறப்படும் வரை பாரதிராஜாவும் சரத்குமாரும் மோதிக் கொண்டனர். இருவருமே ஒருவரை ஒருவர்முறைத்துக் கொண்டே நெய்வேலிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா தனக்கு உடல் நலமில்லை என்று கூறிவிட்டு நெய்வேலி போகவில்லை.
கலையுலகினரை நெய்வேலி அழைத்துச் செல்ல சரியான ஏற்பாடுகள் செய்யவில்லை என்று கூறிய திமுக எம்.எல்.ஏவானடி.ராஜேந்தர் கடைசி நேரத்தில் பஸ்சில் ஏறாமல் திரும்பிச் சென்றார்.
முன்னதாக பாரதிராஜா விடுத்த அறிக்கையில், கலைஞர் கருணாநிதியும் மிகவும் கீழ்த்தரமான அரசியலுக்குப்போய்விட்டார். நெய்வேலி போராட்டம் வெற்றிகரமாக நடந்து விட்டால் அது ஜெயலலிதாவுக்கு நல்ல பெயரைப்பெற்றுக் கொடுத்து விடும் என்று நினைத்து சரத்குமார், நெப்போலியன் ஆகியோரை போக வேண்டாம் என்றுகூறினார்.
ஆனால், தங்கள் தலைவரோடு சேர்த்து தங்களையும் மக்கள் ஒதுக்கி விடுவார்கள் என்ற காரணத்தால்போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக இந்த நடிகர்கள் அறிவித்துள்ளனர்.
கருணாநிதியைப் போய் நான் ஏன் பார்க்கவில்லை என்று சரத்குமார் கேட்டுள்ளார். யார் இந்த கருணாநிதி?அவரைப் போய் நான் ஏன் சந்திக்க வேண்டும் என்று கூறியிருந்தார் பாரதிராஜா.
இதற்கு சரத்குமார் மிகக் கடும் கண்டனம் தெரிவித்தார். திமுக நடிகர்களுடன் தனியே புறப்பட்ட சரத்குமார்நிருபர்களிடம் பேசுகையில்,
பாரதிராஜாவின் அறிக்கை மூலம் இந்தப் போராட்டம் குறித்தே மீண்டும் எங்களுக்கு சந்தேகம் வருகிறது. ஆனால்,நல்ல நோக்கத்துக்காக குரல கொடுக்கிறோம், இதில் திமுகவால் பிளவு வரக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகபோராட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டுச் செல்கிறேன்.
கலைஞர் குறித்துப் பேச பாரதிராஜாவுக்கு எந்த அருகதையும் இல்லை என்றார்.
இதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பாரதிராஜா எதுவும் பேசாமல் பஸ்சில் ஏறி உட்கார்ந்தார்.
நேற்று வரை சண்டை போட்ட இவர்கள் இன்று காலை போராட்டத்துக்கு புறப்படும்போது கூட ஒற்றுமையாகபோகவில்லை.
மழை விட்டாலும் தூவானம் விடாது போலிருக்கிறது...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications