ரஜினி நாளை உண்ணாவிரதம்
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் எதிரே நாளை (ஞாயிற்றுக்கிழமை) உண்ணாவிரதப்போராட்டம் நடத்துகிறார். ரசிகர்கள் அந்தந்த மாவட்டத் தலைநகர்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துமாறுரஜினி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரைஉண்ணாவிரதம் நடக்கிறது. இதில் நடிகர் சங்கம் கலந்து கொள்ளும் என்று சங்கத் தலைவர் விஜயகாந்த்கூறியுள்ளார்.
திமுக நடிகர்களும் கலந்து கொள்வார்கள் என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
ரஜினிக்கு பா.ஜ.க, காங்கிரஸ் போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆனால், இதில் அதிமுக நடிகர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவித்துள்ளனர். பாரதிராஜாவும் இதைபுறக்கணிப்போம் என்று கூறியுள்ளார்.
விஜய்காந்த் இந்த உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தருவோம் என்று அறிவித்திருந்தாலும் கூட பல நடிகர், நடிகையர்இதில் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நெய்வேலியில் பேரணி, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு விட்டு ரஜினி நடத்தும்உண்ணாவிரதப் போராட்டத்திலும் எப்படி கலந்து கொள்ள எப்படி முடியும் என்று பல நடிகர், நடிகையர்விஜய்காந்திடம் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களிடம் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதற்கிடையே ரஜினியின் போராட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அதிமுக நடிகர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து ராதாரவி கூறுகையில்,
ரஜினி என்ற தனி நபரை நம்பி நடிகர் சங்கம் இல்லை. நடிகர் சங்கத்தின் ஒட்டுமொத்த முடிவான நெய்வேலிபோராட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த ரஜினியின் உண்ணாவிரதத்தில் நடிகர் சங்கம் கலந்து கொள்ளும்என்று விஜயகாந்த் அறிவித்திருப்பது தவறு.
சங்கத்திற்காகத்தான் நடிகர்களே தவிர, தனி நபருக்காக சங்கம் அல்ல.
ரஜினி உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக நடிகர்களான நானோ, அல்லது எஸ்.எஸ்.சந்திரன், தாமு, மன்சூர்அலிகான் போன்றோர் கலந்து கொள்ள மாட்டோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications