கிருஷ்ணாவின் பாத யாத்திரை மீது கல், தக்காளி வீச்சு
மாண்டியா:
தமிழகத்துக்கு எதிராக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா நடத்திய பாத யாத்திரை ஊர்வலத்தின் மீது கல்வீச்சு நடந்தது. அழுகியதக்காளிகளும் வீசப்பட்டன. இதனால் மாண்டியாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு நீர் விட முடியாது என்று அறிவித்த கிருஷ்ணா தனது மாநில விவசாயிகளின் ஆதரவைத் திரட்ட பாத யாத்திரைஆரம்பித்தார். 15ம் தேதி வரை நடக்க இருந்த இந்த யாத்திரை எதிர்க் கட்சிகளின் விமர்சனத்தால் இன்றுடன் முடிவுக்கு வந்தது.
மாண்டியாவில் பாத யாத்திரையை இன்று மாலை முடித்த அவர் பொதுக் கூட்ட மேடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போதுஅவரைத் தொடர்ந்து வந்த ஊர்வலத்தின் மீது கற்கள் வீசப்பட்டன, அழுகிய தக்காளிகளும் வந்து விழுந்தன.
இவை முதல்வர் மீது விழவில்லை. ஆனால், ஊர்வலத்தில் வந்தவர்கள் இதில் காயமடைந்தனர். அந்தப் பகுதியில் போராட்டம்நடத்தி வரும் விவசாயிகள் சங்கத்தினர் தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.
இங்கு பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு அவர் இன்று கிருஷ்ணராஜசாகர் அணைக்குச் செல்கிறார். அங்கு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இக் கூட்டத்தில் நடிகர் ராஜ்குமாரைக் கலந்து கொள்ளச் சொல்லி கிருஷ்ணா வலியுறுத்தியிருந்தார். ஆனால், இந்தப பொதுக்கூட்டத்துக்குப் போக வேண்டாம் என ரஜினி தரப்பில் இருந்து ராஜ்குமாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்வருவாரா என்பது சந்தேகமே.
இந் நிலையில் கிருஷ்ணாவுக்கு எதிராக தமிழகம் தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் இரண்டாவது நோட்டீஸ்அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கிருஷ்ணா கூறுகையில்,
தற்போது இரு மாநிலங்களிலும் பெய்து வரும் மழையால் காவிரியில் நீர் அளவு அதிகரித்துள்ளது. மேலும் மழை பெய்யும் எனஎதிர்பார்க்கிறோம். இதன்மூலம் இரு மாநிலங்களுக்கும் இடையிலான பிரச்சனை தீரும்.
உச்ச நீதிமன்றத்தை நான் மிகவும் மதிக்கிறேன். நமது உரிமைகளைக் காப்பதும் நீதிமன்றம் தான். நான் நீதிமன்றத்துக்கு தலைவணங்குகிறேன். ஆனால், காவிரி விஷயத்தில் இப்போது பெய்து வரும் மழையையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் கிருஷ்ணா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications