நெய்வேலி போராட்டம்: புறப்பட்டனர் கலையுலகினர்
சென்னை:
நடிகர் விஜயகாந்த்- இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் தலைமையில் கர்நாடகத்துக்கு எதிராக போராட்டம் நடத்த100க்கும் மேற்பட்ட பேருந்துகளில் தமிழ்த் திரையுலகக் கலைஞர்கள் இன்று காலை 6 மணிக்கு நெய்வேலிபுறப்பட்டுச் சென்றனர்.
முதலில் சில பஸ்கள் மட்டுமே 6 மணிக்குப் புறப்பட்டன. பிற பஸ்கள் வரத் தாமதமானதாலும் பல நடிகர்கள் வரத்தாமதமானதாலும் முதலில் இருந்த வேகம் குறைந்தது. 8 மணி வரை கூட நடிகர் சங்கத்தில் இருந்து பஸ்கள்புறப்பட்டுக் கொண்டிருந்தன.
காவிரியில் தண்ணீர் விடாமல் இருந்து வருகிறது கர்நாடகம். இதில் அரசியல்வாதிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்க திடீரென கர்நாடக சினிமாகாரர்கள் தமிழ்நாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தி பிரச்சனையைஅதிகமாக்கினர்.
இதனால் அமைதியாக இருந்த தமிழக திரையுலகமும் பதிலடி தர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.வழக்கம்போல் ரஜினி அமைதியாகிவிட பாரதிராஜா முயற்சி எடுத்து இந்த தமிழக விவசாயிகளுக்கு ஆதரவானபோராட்டத்துக்கு உருவம் கொடுத்தார்.
அரசியல்வாதிகளின் சினிமாத்தனம், ரஜினி போன்ற சினிமா கலைஞர்களின் அரசியல் இதையெல்லாம் தாண்டிஇந்த தமிழக விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் இன்று நடக்கிறது.
இதனால் கர்நாடகத்துக்கு மின்சாரத்தை நிறுத்த முடியாமல் போகலாம். ஆனால், இந்தப் போராட்டம் மத்தியஅரசின் அமைதியை கொஞ்சமாவது கலைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
நெய்வேலி அனல் மின் நிலையம் அருகே பாரதிராஜா தலைமையில் மாபெரும் பேரணியும் நடக்க உள்ளது.
இந்தப் போராட்டத்தில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், திரைப்படஉரிமையாளர்கள் சங்கம், திரைப்படத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு திரையுலக சங்கத்தினர் கலந்துகொள்கின்றனர்.
ரஜினியைத் தவிர ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் இதில் கலந்து கொள்கிறது.
நடிகர்கள் சத்யராஜ், அஜீத், கார்த்திக், பிரசாந்த், வடிவேலு, விஜய், சூர்யா, முரளி உள்ளிட்டவர்களும் மும்தாஜ்,ஜோதிகா, மீனா, மனோரமா உள்ளிட்ட நடிகைகளும் புறப்பட்டுச் சென்றனர்.
நடிகர் விஜயகாந்த், சரத்குமார், நெப்போலியன், சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் தனியே முன்பே புறப்பட்டுச்சென்றுவிட்டனர். அதேபோல, திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கமான பெப்சிஅலுலவகம், திரைப்பட கில்டு சபை ஆகிய இடங்களிலிருந்தும் பிற கலைஞர்கள் பஸ்களில் புறப்பட்டு நெய்வேலிசென்றனர்.
அனைவரும் கருப்பு உடையணிந்து புறப்பட்டுச் சென்றனர். மொத்தம் 700 நடிகர்கள் உள்பட சுமார் 5000 பேர் இதில்பங்கேற்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பகல் 2 மணியளவில் கடலூர் வந்து சேருவர் என்று தெரிகிறது. அங்குள்ள கிருஷ்ணசாமி இன்ஜினியரிங்கல்லூரியில் பகல் உணவருந்துகின்றனர். ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து உண்ணும் வகையில் டேபிள், சேர்கள்போட்பட்டுள்ளன.
உணவு எளிமையாக இருந்தால் போதும் என நடிகர் சங்கம் கூறியபோதிலும் அசைவ உணவும் தயாரிக்கப்பட்டுள்ளது.அண்ணாமலைப் பல்கலைக்கழக இணை வேந்தரான தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி இந்த உணவு செலவுகளை ஏற்றுள்ளார்.
செட்டி நாட்டு சமையல் காரர்களை வைத்து உணவு தயாரிக்க ஏற்பாடு செய்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications