பேரணியை நேரடி ஒளிபரப்பு செய்ய சன் டிவிக்கு அனுமதி மறுப்பு
நெய்வேலி:
நெய்வேலியில் நடக்க இருந்த போராட்டத்தை நேரடியாக ஒளிபரப்ப சன் டிவிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
முதலில் நடிகர், நடிகைகள் பேரணியையும் போராட்டத்தையும் நேரடியாக ஒளிபரப்ப ஜெயா டிவி முடிவு செய்தது. இந் நிலையில்இன்று ரஜினியின் எஜமான் படத்தை ஒளிபரப்ப இருந்த சன் டிவி அதை கொஞ்சம் தள்ளிப் போட்டுவிட்டு இந்த பேரணியைநேரடியாக ஒளிபரப்புவோம் என்று அறிவித்தது.
ஆனால், பேரணி நடக்கும் பாதையில் சன் டிவியின் சாட்டிலைட் வேன் மற்றும் கேமரா யூனிட்டை அனுமதிக்க போலீசார்மறுத்துவிட்டனர். இது குறித்து கடலூர் மாவட்ட எஸ்.பி, ராஜிவ் குமார் கூறுகையில்,
இந்தப் போராட்டத்தை நேரடியாகப் படம் பிடித்து ஒளிபரப்ப போராட்டம் நடத்தும் பாரதிராஜாவின் அனுமதியை சன் டிவிபெற்றிருக்க வேண்டும். ஆனால், அந்த அனுமதி கடிதம் சன் டிவியிடம் இல்லை. இதனால் அவர்களுக்கு அனுமதிதரப்படவில்லை.
மேலும் சன் டிவி நிறுவனத்தினர் போலீசாருடன் காலையில் இருந்த வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அவர்களதுசாட்டிலைட் தொடர்பு வேன் மற்றும் கேமரா யூனிட்டை அகற்ற உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
ரவிக்குமாரின் உத்தரவையடுத்து மாவட்ட துணை எஸ்.பி. முருகைய்யா அந்த வேனை பேரணிப் பாதையில் இருந்து அகற்றினார்.இதற்கு சன் டிவி நிருபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்துவெளியேற்றினர்.
அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியைப் படம் பிடித்து நேரடியாக ஒளிபரப்ப ஜெயா டிவிக்கு முழு அனுமதி தரப்பட்டுள்ளது.
அதே போல நெய்வேலி மின் நிலையம், மின் நிலைய ஊழியர் குடியிருப்புக்குள் நுழையவும் நடிகர், நடிகைகளுக்கு அனுமதிமறுத்துள்ளேன். அதை அவர்கள் கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராஜிவ் குமார்.
மத்திய அரசிடம் சன் டிவி புகார்:
நெய்வேலி பேரணியை படம் பிடிக்க விடாமல் போலீசார் தடுத்தது குறித்து மத்திய செய்தி-ஒளிபரப்புத்துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜிடம் சன் டிவி புகார் கூறியுள்ளது.
இது தொடர்பாக அவருக்கு பேக்ஸ் மூலம் புகார் அனுப்பப்பட்டுள்ளதாக சன் டிவியின் நிர்வாகய இயக்குனர் பன்னீர்செல்வம்கூறினார்.
தனது புகாரில், போலீசார் ஒரு தலைப் பட்சமாக செயல்பட்டுள்ளனர். ஜெயா டிவியில் மட்டுமே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவேண்டும் என்ற காரணத்தால் போலீசார் திட்டமிட்டு இதைச் செய்துள்ளனர்.
பாரதிராஜாவிடம் நாங்களும் அனுமதி கடிதம் வாங்கியிருந்தோம். இருந்தும் போலீசார் இப்படிச் செய்துவிட்டனர். இதில் மத்தியஅமைச்சராகிய நீங்கள் தலையிட்டு இந்த முக்கிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப எங்களுக்கு அனுமதி கிடைக்கச் செய்ய வேண்டும்.
இவ்வாறு சன் டிவியின் புகாரில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், போராட்ட பாதைக்கு அருகில் இருந்த வண்ணம் சன் டிவி இந்த நிகழ்ச்சியை லைவ் ஆக ஒளிபரப்பி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications