தியேட்டர்களில் காலை, பகல் காட்சிகள் ரத்து
சென்னை:
நெய்வேலியில் கலையுலகினர் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னை நகர தியேட்டர்களில் இனறு(சனிக்கிழமை) காலை மற்றும் பகல் காட்சி ரத்து செய்யப்பட்டன.
இது குறித்து சென்னை தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் அபிராமி ராமநாதன்வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
சங்கத் தலைவர் ஈகா சீனிவாசன் தலைமையில் நடந்த உறுப்பினர் கூட்டத்தில், கலையுலகப் போராட்டத்திற்குஆதரவு தெரிவிக்கும் வகையில், காலை மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்தக் காட்சிகளை ரத்து செய்து விட்டு அனைவரும் நெய்வேலி போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல, தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்கத் தலைவர் அண்ணாமலையும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதனால் சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே பல இடங்களில் காலைக் காட்சிகளும் பகல் காட்சிகளும்ரத்தாயின.












Click it and Unblock the Notifications