பெங்களூரில் போட்டி ஊர்வலம்: தமிழக பஸ்கள் ரத்து

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

நெய்வேலியில் நடத்தப்படும் போராட்டத்தைக் கண்டித்து தமிழகத்துக்கு எதிராக இன்று பெங்களூரில் கண்டன ஊர்வலம்நடந்தது. இதனால் சிவாஜிநகர், ராஜாஜிநகர், விவேக் நகர் உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டது.

வாட்டாள் நாகரான் கன்னட சாளுவளி உள்ளிட்ட கன்னட வெறி அமைப்புகள் இந்தப் பேரணியை நடத்தின. மைசூர் பாங்க்சர்க்கிளில் இருந்து தொடங்கிய இந்த பேரணியால் அப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழக வாகனங்கள் இந்த ஊர்வலம் செல்லும் வழியில் போக வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டன.

இதற்கிடையே நெய்வேலி போராட்டத்தைக் கண்டித்து தமிழக பஸ்களையும் வாகனங்களையும் பெங்களூருக்குள் நுழையவிடாமல் தடுப்போம் என்றும் பல கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.

இதனால் நேற்று மாலை முதல் தமிழக- பெங்களூர் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. நிலைமை சரியான பின்னர் நாளை தான்பஸ் போக்குவரத்து சீராகும் என்று போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது.

இதற்கிடையே மாண்டியாவில் விவசாயிகளும் நெய்வேலியில் நடத்தப்படும் போராட்டத்துக்கு கண்டனம் தெரிவித்து ஊர்வலம்நடத்தினர். பெங்களூர்- மைசூர் நெடுஞ்சாலையில் தர்ணாவும் நடத்தப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+