இந்தியா ஜனநாயக நாடு தானா? கமல் கேள்வி
நெய்வேலி:
கர்நாடகத்தின் செயல்களைப் பார்க்கும் போது இது ஜனநாயக நாடு தானா என்ற சந்தேகம் வருகிறது என நடிகர் கமல்ஹாசன்கூறினார்.
நெய்வேலியில் திரையுலகப் பேரணிக்குப் பின் நேற்றிரவு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய கமல் கூறியதாவது:
இங்கே தமிழ் உணர்வுடன் வந்திருக்கிறோம். இது ஜனநாயக நாடு என்ற நம்பிக்கையோடு வளர்ந்த குழந்தை நான். அந்தநம்பிக்கை தகர்ந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறுவேன் என்று ஒருவர் தெளிவாக, துல்லியமாக கூறியிருக்கிறார்.
அப்படிச் சொன்னதே உத்தரவு மீறப்பட்டதற்கு மிகப் பெரிய ஆதாரமாகும்.
சுப்ரீம் கோர்ட் பலத்தை நம்பியிருக்கும் பிரஜைகள் நாம். ஆனால், அந்த நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார்கர்நாடக முதல்வர் கிருஷ்ணா. இதைச் செய்தவர் படிக்காவர் அல்ல. மெத்தப் படித்தவர்தான்.
காவிரி நீர் இந்த நாட்டின் சொத்து. காவிரியில் தண்ணீர் தர முடியாது என்று சொல்வது தேசிய ஒருமைப்பாட்டையே தகர்ப்பதற்குசமம். காவிரி பல்லாண்டுகளாய் ஓடும் நதி. இது முதலில் தமிழர் நதி. அப்புறம் தான் கன்னடர் என்ற உணர்வை ஏற்படுத்தும்காவிரி.
இதற்கு காவிரிக்கு வரைகோடுகள், புதிய எல்லைக் கோடுகள் போட நினைக்கிறது கர்நாடகம்.
போராட்டம் என்றதும் கத்தி, ரத்தம் என்று நினைத்துவிடாதீர்கள். இது நம் மனச் சுமையைச் சொல்லும் போராட்டம் என்றார் கமல்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications