""தோழமைக் கட்சிகளை விட எதிர்க்கட்சிகளே மேல்"": ஜெ.
சென்னை:
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளை நினைத்துப் பார்க்கும்போது, எப்போதும்அதிமுகவுக்கு எதிராக உள்ள எதிர்க்கட்சிகளே மேல் என்று தோன்றுகிறது என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதிமுகவின் 31-வது ஆண்டு விழாவையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது பல கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டன.ஆனால் தேர்தலுக்குப் பிறகு அந்தக் கட்சிகள் அதிமுகவுக்கு துரோகம் இழைத்து விட்டன.
அவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது இப்போதுள்ள சில எதிர்க்கட்சிகளே மேல் என்று நினைக்கத்தோன்றுகிறது.
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே நல்லுறவு நிலவ நான் பாடுபட்டு வருகிறேன். ஆனால் சிலதலைவர்கள் தங்களது பொறாமை காரணமாக, அதைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
திமுக ஆட்சிக்காலத்தில் வழக்குகள், விசாரணைகள் என்ற பெயரில் கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டுவரை கோர்ட் விசாரணை, ஜெயில் வாழ்க்கை, அவதூறுப் பிரசாரம் போன்றவற்றை நான் சந்தித்தேன்.
அப்போது, முன்பு அதிமுகவில் இருந்து கொண்டு, அதற்குரிய பலன்களை அனுபவித்து விட்டு எனக்கு எதிராக,துரோகிகளாக மாறியவர்கள் தான் எனக்கு பெரும் மன வேதனையைக் கொடுத்தனர்.
அதிமுக அவ்வளவு தான் என்று நினைத்தவர்களுக்கு சாவு மணியாக நாம் 2001 தேர்தலில் பெரும் வெற்றிபெற்றோம். நமது மக்கள் ஆதரவை ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டைஇடைத் தேர்தல்களிலும் நிரூபித்தோம்.
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பது, தீவிரவாத ஒழிப்பு போன்றவற்றில் அதிமுக அரசு தீவிரமாகசெயல்பட்டு வருகிறது. நிதிச்சுமை போன்ற பல்வேறு தடைகள் இருந்தாலும் நலத் திட்டங்களை எனது அரசுசெம்மையாக செய்து வருகிறது.
அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் கொள்கைகளை நிலைநறுத்தும் வகையில் அதிமுக தொண்டர்கள்செயல்பட்டு, கட்சி ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்று அவ்வறிக்கையில்கூறியுள்ளார் ஜெயலலிதா.
அதிமுகவுக்கு 31 வயது:
இதற்கிடையே அதிமுகவின் 31வது ஆண்டு விழாவை இன்று தமிழகம் முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்கள்கோலாகலமாகக் கொண்டாடினர்.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் சிலைக்கு இன்று மாலை அணிவித்தஜெயலலிதா, சமீபத்தில் உயிரிழந்த அதிமுக தொண்டர்களின் குடும்பத்தினருக்கு உதவித் தொகைகளைவழங்கினார்.
கடந்த 1972ம் ஆண்டு திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.ஜி.ஆர்., இந்த நாளில் தான் அனைத்திந்தியஅண்ணா திராவிட முன்னேற்க் கழகம் (அஇஅதிமுக) என்ற கட்சியைத் தொடங்கினார்.
அடுத்து வந்த மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தையும், சட்டசபைத் தேர்தலில் இரண்டு இடங்களையும் அதிமுககைப்பற்றியது.
இதையடுத்து 1977ல் நடந்த சட்டசபைப் பொதுத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய எம்.ஜி.ஆர்.,1987 டிசம்பரில் மரணமடையும் வரை முதல்வராகத் தொடர்ந்து நீடித்தார்.
அதன் பின்னர் 1991 மற்றும் 2001 தேர்தல்களிலும் அதிமுகவே வென்று ஜெயலலிதா முதல்வரானார். இடையில்1989 மற்றும் 1996 தேர்தல்களில் மட்டும் தமிழகத்தில் திமுக ஆட்சியைக் கைப்பற்றியது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications