புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் "ஏர் ஹார்ன்" ஒலிக்க தடை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் காற்றொலிப்பானுக்கு (ஏர் ஹார்ன்) முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து காற்றொலிப்பான் இல்லாத மாவட்டமாக அது அறிவிக்கப்பட்டுள்ளது.
விராலிமலை அருகே உள்ள மத்தூர் கிராமத்தில் நடந்த விழாவின் போது மாவட்ட கலெக்டர் மக்வானா இதைஅறிவித்தார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து கனரக வாகனங்களிலும் காற்றொலிப்பான் அகற்றப்பட்டு விட்டது.
மேலும் மாவட்டத்திற்குள் வந்து செல்லும் வாகனங்களும், காற்றொலிப்பானை பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
காற்றொலிப்பானை பயன்படுத்துவோருக்கு முதல் தடவை என்றால் ரூ.6,000 அபராதமும், மீண்டும் அதே தவறைசெய்தால் ரூ.9,000 அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்கள் திடீர் திடீரென்று எழுப்பும் இந்த "ஏர் ஹார்ன்" ஒலியால், "சும்மா"உட்கார்ந்திருக்கும் சில பெரியவர்கள் கூட பதறிப் போவார்கள்.
அப்படி இருக்கும் போது, வாகனங்களில் பெற்றோரின் மடியில் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருக்கும்குழந்தைகளின் நிலை பற்றி சொல்லவே வேண்டாம்.
பல சமயங்களில் டிரைவர்கள் பலத்த வேகத்துடன் வாகனங்களைச் செலுத்துவதோடு நில்லாமல், தாளத்தோடு இந்த"ஏர் ஹார்னை" ஒலிக்க விடுவார்கள். இதனால் சாலைகளில் சென்று கொண்டிருப்பவர்களின் காது ஜவ்வு கிழியாதகுறை தான்.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமல்ல. தமிழகம் முழுவதுமே இதை அமல் படுத்தினால் நல்லது.தமிழக அரசு செவி கொடுக்குமா?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications