திமுக எங்களுடைய தோழமை கட்சி: ராமதாஸ்
சென்னை:
திமுக எங்களுடைய கூட்டணிக் கட்சி அல்ல, தோழமைக் கட்சி தான். அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவேண்டுமா என்பது குறித்து தேர்தல் சமயத்தில் தான் முடிவு செய்யப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறினார்.
இதுகுறித்து இன்று சென்னையில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறுகையில்,
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தாலும் திமுகவுக்கும் எங்கள் கட்சிக்கும் இடையே நட்பு ரீதியிலான உறவுதான் உள்ளது.
இந்த நட்பு என்பது கூட்டணியாக மாறுமா, இல்லையா என்பதை அடுத்த மக்களவைத் தேர்தலின் போது தான்சொல்ல முடியும். இப்போது அது பற்றிப் பேசுவதற்கான நேரமும் இல்லை.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டதால் அதிமுகபக்கம் சாய்கிறோம் என்று அர்த்தம் செய்து கொள்ளத் தேவையில்லை. இனி அந்தக் கட்சியுடன் கூட்டணியேகிடையாது.
அதேபோல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேரப் போவதாகவும் கூறப்படுவது தவறான செய்தியாகும். இதைபாஜக தலைவர்களே மறுத்துள்ளனர் என்றார் ராமதாஸ்.
மீண்டும் ரஜினி மீது காட்டம்:
இதற்கிடையே இன்றும் நடிகர் ரஜினிகாந்த்தை ராமதாஸ் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
ஓட்டுக்காக நடிகர் ரஜினிகாந்த்தின் காலில் விழும் அரசியல்வாதிகளை நினைக்கும்போது ரொம்பக் கேவலமாகஇருக்கிறது என்று ராமதாஸ் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில்,
ஐந்து ஓட்டுக்கள் கிடைக்கும் என்றால் அந்த நபரிடம் ஓடும் அரசியல்வாதிகள் இருக்கத் தான் செய்கிறார்கள்.ஆனால் ஓட்டுக்காக ரஜினி போன்ற நடிகர்களின் காலில் விழும் அரசியல்வாதிகளை நினைத்தால் ரொம்பக்கேவலமாக இருக்கிறது.
அவர் அப்படி, இப்படிப் பார்த்தால் அது ஸ்டைலாம், தலையைக் கோதி விட்டால், சிகரெட்டைத் தூக்கிப் பிடித்தால்,நடந்தால், சிரித்தால், தலையைத் தூக்கினால் என்று அவர் என்ன செய்தாலும் அது ஸ்டைலாம்.
என்ன இது? அவர் உண்ணாவிரதம் இருக்கும் மேடையில் வரிசையாக வந்து ரஜினியிடம் ஆசிர்வாதம் வாங்கிச்செல்கிறார்கள்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்கவே முடியாது என்று கர்நாடக அரசு கூறி விட்டது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைகுப்பையில் போட்டு விட்டது அந்த அரசு.
இனிமேலும் கர்நாடகத்தை சும்மா விட்டு வைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அது இந்திய ஜனநாயகத்திற்குவிழுந்த பெருத்த அடியாகும். அரசியல் சட்டம் 256 மற்றும் 356 ஆகிய பிரிவுகளைப் பயன்படுத்தி கர்நாடகத்தைமத்திய அரசு தண்டிக்க வேண்டும்.
உப்புச் சப்பில்லாத பல பிரச்சினைகள் குறித்து குய்யோ முறையோ என்று கத்திக் கொண்டிருக்கும் காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி, தனது கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் கிருஷ்ணா சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைஅவமதித்துக் கொண்டிருப்பதை ஏன் கண்டிக்கவே இல்லை? இப்போது மட்டும் வாயே திறக்காமல் அவர்உள்ளாரே என்றார் ராமதாஸ்.
மேலும் காவிரிப் பிரச்சனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ராமதாஸ்வெகுவாகப் பாராட்டினார்.












Click it and Unblock the Notifications