தூத்துக்குடி அருகே தரை தட்டிய மர்ம கப்பல்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே கடலில் ஒதுங்கி தரை தட்டிய சிறிய கப்பல் ஒன்று கடந்த சில நாட்களாக யாராலும் உரிமைகோரப்படாமல் அநாதையாக மிதந்து கொண்டிருக்கிது.
தூத்துக்குடி அருகே உள்ள வேம்பார் கடல் பகுதியில் இந்தக் கப்பல் தரை தட்டியது. இந்தக் கப்பலில் யாரும்இருப்பதாகத் தெயவில்லை.
மேலும் இந்தக் கப்பல் யாருடையது என்றும் தெரியவில்லை. தரை தட்டி மூன்று நாட்களாகிவிட்ட போதிலும்அந்தக் கப்பலிலிருந்து யாரும் வெளியே வந்த மாதிரித் தெரியவில்லை.
அந்தக் கப்பலுக்கு உரிமை கொண்டாடி யாரும் இதுவரை வரவும் இல்லை.
இதனால் குழம்பிப் போன கப்பல் போக்குவரத்துத்துறை அதிகாரிகளும் போலீசாரும் இந்தக் கப்பல் குறித்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications