கர்நாடக ஆளுநரிடம் தமிழர் சங்கம் மனு
பெங்களூர்:
பெங்களூரில் தமிழ் டி.வி. சேனல் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்று போலீசாரே உத்தரவிட்டுள்ளதை எதிர்த்துகர்நாடக மாநில ஆளுநர் சதுர்வேதியிடம் கர்நாடக தமிழர் சங்கம் புகார் கொடுத்துள்ளது.
கர்நாடக தமிழர் சங்கத் தலைவர் ராமன் இது தொடர்பாக ஆளுநரிடம் அளித்துள்ள புகார் மனுவில்,
காவிரிப் பிரச்சனையில் கர்நாடக அரசின் நிலைக்கு தான் அம்மாநிலத் தமிழர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.
ஆனால் கர்நாடகத் தமிழர்களைத் தனிமைப்படுத்தும் வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் தமிழ் டி.வி.சேனல்களை நிறுத்துமாறு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை கன்னட வெறியர்கள் மிரட்டி வருகின்றனர்.
தற்போது கன்னட வெறியர்களுக்குப் போலீசாரும் துணை போயுள்ளனர். தமிழ் டி.வி. சேனல்களை ஒளிபரப்பக்கூடாது என்றும் தமிழ் திரைப்படங்களை ஒளிபரப்பக் கூடாது என்றும் போலீசாரே உத்தரவிட்டிருப்பது மிகவும்கண்டிக்கத்தக்கது.
கர்நாடகத் தமிழர்களைத் தனிமைப்படுத்தும் இந்தச் செயல்களை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.கர்நாடகத் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தமிழ் சேனல் ஒளிபரப்புகளை மீண்டும் உடனடியாகத் தொடங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றுஅம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications