துரைமுருகன் வீடுகளில் ரூ.4 கோடி மதிப்பு ஆவணங்கள் சிக்கின
சென்னை:
முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தியதில்ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்துக்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
நேற்றைய சோதனையின் முடிவில் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
வருமானத்துக்கு அதிகமாக துரைமுருகன் சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக நேற்று அவருடைய வீடுகளிலும்,அவர் உறவினர்களின் வீடுகளிலும், அவருக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்களிலும் சோதனை நடத்தினோம்.
துரைமுருகனோ, அவருடைய மனைவியோ பரம்பரைப் பணக்காரர்கள் கிடையாது. அப்படி இருக்கும் போதுதங்கள் மகளுடைய திருமணத்திற்காக மட்டும் ரூ.1 கோடி வரை செலவழித்துள்ளனர்.
தன்னுடைய மகன் கதிர் ஆனந்துக்காக ரூ.1.5 கோடி செலவில் "கதிர் இன்போடெக்" என்ற கம்ப்யூட்டர்நிறுவனத்தைத் தொடங்கி, அதற்காகப் பல கோடி ரூபாய் செலவும் செய்துள்ளார் துரைமுருகன்.
மேலும் வேலூர் மாவட்டம் காட்பாடி மற்றும் சென்னையில் உள்ள தன் வீடுகளைப் புதுப்பித்த வகையிலும், புதியகார்களை வாங்கிய வகையிலும் செலவு செய்தது போலவும் கணக்குகள் எழுதப்பட்டுள்ளன.
தன் குடும்பத்தார் அதிகம் சம்பாதித்தது போலவும் கணக்குகள் காட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்தப் பணம்அனைத்தும் அவர் அமைச்சராக இருந்த போது முறைகேடாகச் சேர்த்த சொத்துக்கள் தான்.
மொத்தம் 12 இடங்களில் நாங்கள் நடத்திய சோதனைகளில் ரூ.4 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அவருக்குஇருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம்.
துரைமுருகன் தன் மனைவி பெயரில் வாங்கிய இரண்டு வீடுகள், சென்னையை அடுத்த புறநகரில் ரூ.1 கோடிசெலவில் அமைக்கப்பட்டுள்ள "ராஜம்மாள் எக்ஸ்போர்ட்ஸ்", காட்பாடி அருகே ரூ.1 கோடி செலவில்அமைக்கப்பட்டுள்ள "டைடல் வாட்டர்" என்ற மினரல் வாட்டர் கம்பெனி, எம்.எஸ்.கே. கல்வி அறக்கட்டளை என்றபெயரில் வாங்கப்பட்ட நிலம் ஆகியவை இந்த சொத்துக்களில் அடக்கம்.
இவை அனைத்துமே துரைமுருகன் தன் அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி தவறாகச் சம்பாதித்த சொத்துக்கள்தான். ஆனால் அவர் பதவியில் இருக்கும் போது தன் மகன் அதிகமாகச் சம்பாதித்ததாகவும், வேளாண்மை மூலமாகஅதிக வருமானம் கிடைத்ததாகவும் கணக்கு காட்டியுள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications