தமிழில் குடமுழுக்கு செய்த சிவாச்சாரியார்களுக்கு வக்கீல் நோட்டீஸ்
கரூர்:
கரூர் மாவட்டம் திருக்கூடலூரில் தமிழில் குடமுழுக்கு நடந்த சிவன் கோவில் கருவறைக்குள் நுழைந்து தீட்டுஏற்படுத்தியதாக சிவாச்சாரியார்கள் சிலருக்கு கோவில் தக்காரின் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
திருக்கூடலூரில் கடந்த மாதம் 9ம் தேதி தமிழில் குடமுழுக்கு விழா நடந்தது. பலத்த எதிர்ப்புகளையும்சர்ச்சைகளையும் மீறி தமிழிலேயே மந்திரம் ஓதப்பட்டு குடமுழுக்கு விழா வெற்றிகரமாக நடந்தது.
இதனால் கோவிலில் தீட்டு ஏற்பட்டு விட்டதாகக் கூறி பிராமணர்கள் கோவிலைக் கழுவி தீட்டுக் கழித்தனர்.
தமிழில் மந்திரம் சொல்வதா என்று காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் உள்ளிட்டவர்கள் கூற,தமிழில் மந்திரம் கூறியதில் என்ன தவறு என்று திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட சில அரசியல்வாதிகளும்தமிழ் ஆர்வலர்களும் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
இதனால் தமிழகம் முழுவதும் இந்தக் குடமுழுக்கு விழா நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச்சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பிரச்சினை கிளம்பியுள்ளது.
கோவில் கருவறைக்குள் சிவாச்சாரியார்கள் நுழைந்து, சுவாமி விக்கிரகத்தைத் தொட்டு விட்டதால் தீட்டு ஏற்பட்டுவிட்டதாக கூறி தமிழில் மந்திரம் ஓதி குடமுழுக்கு செய்த சிவாச்சாரியார்களுக்கு கோவில் தக்கார் முனுசாமியின்வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதனால் சிவாச்சாரியார்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் புதிய குழப்பம் கரூரில்மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications