சட்டசபை காங். தலைவர் யார்?: கலகலக்கும் கோஷ்டி மோதல்- சோனியா கையில் முடிவு
சென்னை:
தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக யாரை நியமிக்கலாம் என்பதில் அக்கட்சியின்எம்.எல்.ஏக்களிடையே ஒருமித்த முடிவு எடுக்கப்படாத காரணத்தால், கட்சித் தலைவரான சோனியா காந்தியேஅவரைத் தேர்ந்தெடுப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமாகாவிலிருந்து வந்து காங்கிரசில் இணைந்த அதன் தலைவருக்கு அகில இந்தியப் பொதுச் செயலாளர் பதவியும்,சோ. பாலகிருஷ்ணனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளன.
இதனால் ஏற்கனவே காங்கிரசில் இருந்தவர்கள் நொந்து போயுள்ளனர். எனவே சட்டசபை காங்கிரஸ் தலைவர்பதவியையாவது தாங்களே கைப்பற்றிவிட வேண்டும் என்று இவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளனர்.
இணைப்புக்கு முன்பு சட்டசபை காங்கிரஸ் தலைவராக இருந்த யசோதா அந்தப் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளநினைக்கிறார்.
ஆனால் சட்டசபை தமாகா தலைவராக இருந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியத்தைத் தான் இப்பதவியில் நியமிக்கவேண்டும் என்று வாசன் விரும்புகிறார். தற்போதைய காங்கிரஸ் செயல் தலைவரான இளங்கோவனும் இதைஆமோதித்துள்ளார். காரணம்- இவருக்கு யசோதாவைப் பிடிக்காது.
மேலும் தமாகாவிலிருந்து வந்த 18 எம்.எல்.ஏக்களால் தான் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும்பிரம்மாண்டமான 25ஐத் தொட்டிருக்கிறது. எனவே தமாகாவிலிருந்து வந்தவரைத் தான் சட்டசபை காங்கிரஸ்தலைவராக்க வேண்டும் என்று வாசன் கூறியுள்ளார்.
இந்நிலையில் சட்டசபை காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக இன்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரான ரமேஷ் சென்னிதாலா தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் வாசன், சோ.பா. மற்றும் இளங்கோவன் ஆகியோரும் கலந்து கொண்டனர். காங்கிரசில்வழக்கமாகத் தலைதூக்கும் கோஷ்டி மோதல் எதிர்பார்த்தது போலவே இன்றும் எட்டிப் பார்த்தது.
ஒவ்வொரு எம்.எல்.ஏவாகத் தனியாக அழைத்து ரமேஷ் சென்னிதாலா பேசிப் பார்த்தார். ஆனால் ஒவ்வொருவரும்ஒவ்வொருவரின் பெயரையும் பரிந்துரை செய்யவே அவர் கூட மிகவும் குழம்பிப் போய்விட்டார்.
இதனால் சட்டசபை காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் அக்கட்சி எம்.எல்.ஏக்களிடையே ஒருமித்த கருத்துஎழாமல் போய்விட்டது. இதையடுத்து கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் சென்னிதாலா பேசுகையில்,
யசோதா, எஸ்.ஆர்.பி. தவிர எஸ்.ஜி. வினாயகமூர்த்தி, சி. ஞானசேகரன், எச்.எம். ராஜு ஆகியோர் பெயர்களையும்சட்டசபை தலைவர் பதவிக்கு எம்.எல்.ஏக்கள் கூறினர்.
வரும் 24ம் தேதி தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. அதனால் சட்டசபை காங்கிரஸ் தலைவர்யார் என்பதை நாளைக்கே (23ம் தேதி) சோனியா அறிவித்து விடுவார்.
அதிருப்தி எம்.எல்.ஏக்களான ஐந்து பேரும் தமிழக சட்டசபையில் தமாகா உறுப்பினர்களாகவே நீடிப்பார்கள் என்றுசபாநாயகர் காளிமுத்து அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நாங்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்போம் என்றார் சென்னிதாலா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications