தமிழகத்துக்கு உடனே நீர் விட உச்ச நீதிமன்றம் உத்தரவு: கர்நாடகத்தில் மீண்டும் போராட்டம்
டெல்லி:
தமிழகத்துக்கு உடனே நீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை மீறி தமிழகத்துக்கு நீர் விட மறுத்த கர்நாடகத்தை ஒரு பிடி பிடித்த தலைமை நீதிபதி கிர்பால் தலைமையிலானடிவிஷன் பெஞ்ச் தமிழகத்துக்கு உடனே நீர் விட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
தமிழகத்துக்கு தண்ணீர் விட்டால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடும் என்று பேசிய கர்நாடக அரசு ஆட்சியை விட்டுவிலகி விடலாம் என்றும் நீதிபதிகள் கோபத்துடன் கூறினர்.
மீண்டும் போராட்டம் தொடக்கம்:
தமிழகத்குக்கு நீர் விடுமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தையடுத்து மாண்டியாவிலும் மைசூரிலும் பெங்களூரிலும் மீண்டும்போராட்டத்தைத் தொடங்க விவசாயிகளும் கன்னட வெறி அமைப்புகளும் முடிவு செய்துள்ளன.
மைசூரிலும் மாண்டியாவில் கடந்த இரு மாதங்களாகவே கடையடைப்பு, சாலை மறியல், பள்ளிகள் மூடல், தமிழகவாகனங்களைத் தாக்குவது என போராட்டங்கள் நடந்து வந்தன. கடந்த வாரம் தான் அமைதி திரும்பியது.
இந் நிலையில் தமிழகத்துக்கு நீர் விட வேண்டும் என்ற உத்தரவை முதல்வர் கிருஷ்ணா நிறைவேற்றினால் மீண்டும்போராட்டத்தைத் தொடங்குவோம் என விவசாயிகள் சங்கத் தலைவர் மாடே கெளடா கூறினார்.
தமிழகத்துத்கு எக்காரணம் கொண்டும் நீர் விடக் கூடாது. அதனால் ஏற்படும் எந்த விளைவையும் சந்திப்பேன் என்று கிருஷ்ணாஉறுதியளித்திருந்தார். அதை அவர் நிறைவேற்ற வேண்டும் என்றார் கெளடா.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையடுத்து மாண்டியாவில் சிறப்பு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications