காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காவிரிப் பிரச்சனை தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு போராட்டங்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தான்காரணம் என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணா குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகம் தொடர்ந்துள்ள இரண்டாவது அவமதிப்பு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளபதில் மனுவில் இவ்வாறு கூறியுள்ள கிருஷ்ணா, தனக்கு எதிராக தமிழகம் தாக்கல் செய்துள்ள 2 அவமதிப்புவழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கத் தவறிய கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல்செய்துள்ள 2 அவமதிப்பு வழக்குகள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த மாதம் 3ம் தேதியும் இந்த மாதம் 4ம் தேதியும்இரண்டு முறை உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

மதிக்கத் தவறிய கர்நாடகம்...

ஆனால் இரண்டு முறையுமே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கத் தவறிவிட்டது. இதையடுத்துகடந்த மாதமும், இம் மாதமும் கிரிஷ்ணாவுக்கு எதிராக தமிழக அரசு இரு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைத்தொடர்ந்தது.

முதல் அவமதிப்பு வழக்கில் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராகவும் ஏன் அவமதிப்புநடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

அதே போலவே இரண்டாவது அவமதிப்பு வழக்கிலும் கிருஷ்ணா, கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பாட்டீல்மற்றும் கர்நாடக அரசு தலைமைச் செயலாளர் ரவீந்திரா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இன்று விசாரணை:

இந்த இரு வழக்குகளும் இன்று விசாரணைக்கு வருகின்றன.

நேற்று இந்த இரு நோட்டீசுக்கும் பதில் அளித்து கிருஷ்ணா பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.அதில்,

காவிரிப் போராட்டம் வெடித்து உச்சகட்டத்தை அடைந்திருப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் காரணம்.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு முழுமையாக ஒத்துழைப்பு தரவில்லை.காவிரிப் பிரச்சனை இவ்வளவுநாட்களுக்கும் நீடிப்பதற்கு தமிழக அரசு தான் காரணம்.

காவிரி நதிநீர் ஆணையத்தையும், அதன் தலைவரான பிரதமர் வாஜ்பாயையும் கூட ஜெயலலிதா மதிக்கவேஇல்லை. அவருடைய பிடிவாதப் போக்கு காரணமாகத் தான் கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர்.இதனால் ஒரு விவசாயியும் கபினி அணையில் விழுந்து இறந்தார்.

அவகாசம் வேண்டும்: கிருஷ்ணா

மேலும் போதிய கால அவகாசம் தந்தால் நான் என்னுடைய விரிவான பதிலை அளிக்க முடியும் என்பதால் இந்தவழக்கை இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்.

இவ்வாறு கிருஷ்ணா தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்பை வைத்துத் தான் கர்நாடகத்தில் தமிழ் சேனல்களை மீண்டும் ஒளிபரப்புவது, மற்றும் தமிழ்படங்கள் திரையிடுவது ஆகியவை குறித்து முடிவு செய்வோம் என கன்னட வெறி அமைப்புகள் கூறியுள்ளன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+