புலிகளின் அமைதிப் பேச்சு குழுவில் மேலும் 2 பேர்
கொழும்பு:
தாய்லாந்தில் நடைபெறவுள்ள இரண்டாவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகளின் குழுவில்மேலும் 2 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 16 முதல் 18ம் தேதி வரை தாய்லாந்தின் சத்தாஹிப் நகரில் நடந்த முதற்கட்டப் பேச்சுவார்த்தையின்போது புலிகளின் சார்பாக அதன் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் தலைமையில் அவருடைய மனைவிஅடேல் ஆன்னே, புலிகளின் சட்ட ஆலோசகர் வி. ருத்ரகுமார் மற்றும் புனரமைப்பு நிபுணர் ஜெய் மகேஸ்வரன்ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் வரும் 31ம் தேதி தொடங்கவுள்ள இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தையில் புலிகளின் சார்பில்மேலும் இரண்டு பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.
புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் எஸ்.பி. தமிழ் செல்வன் மற்றும் மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களின்புலிகள் பிரிவு கமாண்டர் கருணா ஆகியோர் தான் அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவில் தற்போதுசேர்க்கப்பட்டுள்ளனர்.
வன்னி பகுதியிலேயே இது நாள் வரை இருந்து வரும் தமிழ் செல்வனும் கருணாவும் அந்தப் பகுதியை விட்டுஅவ்வளவாக வெளியே வந்ததே கிடையாது.
இந்நிலையில் இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ள இவர்கள் இரண்டு பேரும்கொழும்பு வழியாகவே தாய்லாந்துக்குச் செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வன்னி பகுதியில் முகாமிட்டுள்ள பாலசிங்கம் கூட சமீபத்தில் லண்டனிலிருந்து கொழும்பு வழியாகத்தான் வன்னிக்கு வந்தார் என்பது நினைவிருக்கலாம். அதிலும் இலங்கையின் அரசு விமானம் மற்றும்ஹெலிகாப்டரையே அவர் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாகரனுடன் நார்வே குழுவினர் சந்திப்பு:
இதற்கிடையே கொழும்பிலிருந்து வன்னி பகுதிக்குச் சென்ற நார்வே தூதுக் குழுவினர் புலிகளின் தலைவரானவேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்துப் பேசினர்.
நார்வே வெளியுறவுத்துறை இணை அமைச்சரான விடார் ஹெல்கெசன் தலைமையிலான இந்தத் தூதுக் குழுவினர்,இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயுடன் இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசனைநடத்தினர்.
இதையடுத்து வன்னிப் பகுதிக்கு விரைந்த நார்வே குழுவினர் பிரபாகரனைச் சந்தித்துப் பேசினர்.
வடக்கு இலங்கையில் சீரமைப்பு பணிகளைத் துவங்குவதற்காக அரசு மற்றும் புலிகளின் கூட்டு அதிரடிப்படைகளை நியமிப்பது குறித்து தான் இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக ரணிலுடன் ஏற்கனவே பேச்சு நடத்திவிட்ட நிலையில், புலிகளையும் சந்தித்து நார்வே குழுவினர்பேச்சு நடத்தினர். அப்போது பிரபாகரன் மட்டுமில்லாமல் பாலசிங்கம், அடேல், தமிழ் செல்வன் ஆகியோரும்உடனிருந்தனர்.
சுமார் இரண்டரை மணி நேரம் அவர்கள் பேச்சு நடத்தினர். விடார் ஹெல்கெசன் தற்போது தான் முதல் முறையாகபிரபாகரனைச் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரிகா - நார்வே குழுவினர் சந்திப்பு ரத்து:
முன்னதாக அதிபர் சந்திரிகா குமாரதுங்காவையும் சந்திக்க நார்வே குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால்கடைசி நேரத்தில் அந்தச் சந்திப்பை சந்திரிகா ரத்து செய்துவிட்டார்.
சந்திரிகாவின் பொறுப்புக்களை முடக்கத் திட்டமிட்டிருந்த ரணில் இது தொடர்பாக ஒரு மனுவை இலங்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருடைய திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் முட்டுக் கட்டைபோட்டுவிட்டது.
இதையடுத்து இவ்விஷயத்தில் சந்திரிகாவின் கை ஓங்கியதைத் தொடர்ந்து தான் நார்வே குழுவினருடனானசந்திப்பை சந்திரிகா ரத்து செய்து விட்டதாகக் கருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications