மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வன்முறை
மதுரை:
ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளாத ஊழியர்களை கண்டித்து மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சர்வேஆய்வாளர்கள் அலுவலகத்தில் ஒரு கும்பல் புகுந்து வன்முறைத் தாக்குதல் நடத்தியது.
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது. இருப்பினும் இதில் சில சங்கங்கள் கலந்துகொள்ளவில்லை. அந்த சங்கங்களைச் சேர்ந்தவர்கள் வழக்கம் போல பணிகளைச் செய்து வந்தனர்.
அதுபோலவே, மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சர்வே ஆய்வாளர்கள் அலுவலக ஊழியர்களும்வழக்கம் போல் பணிக்கு வந்தனர். இவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடவில்லை.
வேலைநிறுத்தம் செய்த ஊழியர்கள் இதை அறிந்து அங்கு விரைந்தனர். பணியாற்றிக் கொண்டிருந்தவர்களைவெளியே வருமாறு அழைத்தனர். ஆனால் அவர்கள் வெளியே வர மறுத்து விட்டனர்.
இதையடுத்து கும்பலாக உள்ளே நுழைந்த அவர்கள் மேசை, நாற்காலிகளை தூக்கிப் போட்டு உடைத்தனர்.பைல்களை கிழித்து தூக்கி எறிந்தனர்.
சில நிமிடங்களில் அந்த அலுவலகமே சூறையாடப்பட்டது. பின்னர் அக்கும்பல் அங்கிருந்து வெளியேறியது.
சம்பவம் குறித்துத் தகவலறிந்த கலெக்டர் ராமச்சந்திரன் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டார். வன்முறைக்கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்த வன்முறை நடக்கும்போது ஒரு போலீஸ்காரர் கூட அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications