சட்டசபை காங். தலைவரானார் எஸ்.ஆர்.பி.
சென்னை:
தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவராக எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.பியின் நியமனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஅறிவித்தார்.
மேலும் சட்டசபை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக யசோதா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இவ்வளவுநாட்களும் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செயலாளராக ஞானசேகரனும், கொறடாவாக எச்.எம். ராஜுவும், பொருளாளராக ஜெயக்குமாரும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டது குறித்த கடிதத்தை, சட்டசபை செயலாளர்ஜானகிராமனிடம் கொடுத்தார் எஸ்.ஆர்.பி.
சமீபத்தில் சென்னை வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரான ரமேஷ் சென்னிதாலா ஒவ்வொருகாங்கிரஸ் எம்.எல்.ஏவிடமும் தனித் தனியாக ஆலோசனை நடத்திப் பார்த்தார்.
ஆனால் சட்டசபை காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து அக்கட்சி எம்.எல்.ஏக்களிடையே ஒருமித்தகருத்து ஏற்படவில்லை. இதையடுத்து இந்தப் பொறுப்பை சோனியா காந்தியிடமே சென்னிதாலா விட்டுவிட்டார்.
அதன்படி தான் சட்டசபை காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்டு 14ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் தமாகா இணைக்கப்பட்ட பின்னர், வெறும் 7 எம்.எல்.ஏக்களைமட்டுமே கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி தற்போது 25 எம்.எல்.ஏக்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications