இன்று இரவு மீண்டும் கர்நாடக அமைச்சரவை கூட்டம்

Subscribe to Oneindia Tamil

காவிரி விவகாரம் தொடர்பாக இன்று காலை கூடிய கர்நாடக அமைச்சரவை இன்று இரவு மீண்டும் நடைபெறும்என்று அம்மாநில முதல்வர் கிருஷ்ணா கூறினார்.

இன்று காலை தான் டெல்லியிலிருந்து கிருஷ்ணா பெங்களூருக்கு திரும்பினார். வந்த உடனேயே அவசரஅவசரமாக இன்று காலை 11 மணிக்கு தன் அமைச்சரவையைக் கூட்டி காவிரி குறித்து விவாதித்தார் அவர்.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

கூட்டத்திற்குப் பின்னர் வெளியே வந்து நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணா, இன்று இரவு மீண்டும் அமைச்சரவைகூடவுள்ளது என்று மட்டும் கூறினார். ஆனால் நிருபர்கள் விடாமல், தமிழகத்திற்கு நீர் திறந்துவிடுமாறு காங்கிரஸ்மேலிடம் உத்தரவிட்டுள்ளதே என்று கேட்டனர்.

அதற்கு கிருஷ்ணாவும் பிடிவாதமாக வேறு எதைப் பற்றியும் பேசாமல், வேறு எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல்,இன்று இரவு மீண்டும் அமைச்சரவை கூடும் என்றே திரும்பத் திரும்பக் கூறினார்.

காலையில் கூடிய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அவர் வாயையே திறக்கவில்லை.

இந்நிலையில் இன்று பிற்பகலிலேயே அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் கிருஷ்ணா அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் கர்நாடகத்தின் முக்கிய எதிர்க் கட்சிகளான பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம்ஆகியவை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

ஆரம்பத்தில் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக் கூடாது என்ற கர்நாடக அரசின்முடிவுக்கு நாங்கள் ஆதரவு தந்தோம். ஆனால் பாதயாத்திரை என்று ஒன்றை நடத்தி காவிரிப் பிரச்சனையைமுழுக்க முழுக்க அரசியலாக்கி விட்டார் கிருஷ்ணா என்று அக்கட்சிகள் கோபத்துடன் கூறியுள்ளன.

கடந்த இரண்டு மாதங்களில் காவிரி விவகாரம் தொடர்பாக நான்காவது முறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைகிருஷ்ணா கூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+