கர்நாடகத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை குவிப்பு
Subscribe to Oneindia Tamil
காவிரி அவமதிப்பு வழக்கு தொடர்பாக கர்நாடக அரசைக் கடுமையாகக் கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம் நாளைதன்னுடைய தீர்ப்பை வழங்கவுள்ளதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் மத்திய ஆயுதப்படை போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கர்நாடக மாநில டி.ஜி.பி. மடியாள் நிருபர்களிடம் கூறுகையில்,
மைசூர், மண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் கர்நாடக ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பாதுகாப்புப் பணிக்காக மத்திய ரிசர்வ் போலீசாரும், ஆயுதப்படை போலீசாரும்வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 6 கம்பெனி மத்தியப் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒரு கம்பெனியில் 220 போலீசார் வரைஇருப்பார்கள்.
இதற்கிடையே காவிரி நீர்ப் பிடிப்பு அணைகளான கபினி, கே.ஆர். சாகர் உள்ளிட்ட அணைகளைச் சுற்றியுள்ளபகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார் மடியாள்.
-->












Click it and Unblock the Notifications