நீதிமன்ற தண்டனையில் இருந்து தப்ப கர்நாடகம் முயற்சி: தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு
பெங்களூர்:
உச்ச நீதிமன்ற தண்டனையில் இருந்து தப்ப தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளது.
தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட உச்ச நீதிமன்றம் இருமுறை உத்தரவிட்டும் அதை நிறைவேற்றாமல் அரசியல் செய்து வந்தார்கர்நாடக முதல்வர் கிருஷ்ணா. இதையடுத்து உத்த நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது.
இதை விசாரித்த நீதிமன்றம் கிருஷ்ணாவுக்கு சூடு தந்தது. திங்கள்கிழமைக்குள் ஏதாவது சமரச முயற்சியை எடுக்காவிட்டால்கர்நாடக அரசுக்கு எதிராக மிகக் கடுமையான தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்தது.
இதையடுத்து தனது கட்சியின் தலைவர் சோனியா காந்தியுடன் தீவிர ஆலோசனை நடத்திய கிருஷ்ணா நேற்று பெங்களூர் திரும்பிஇரு முறை அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார்.
அவர் அழைப்பு விடுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கம்யூனிஸ்ட்கள் தவிர அனைத்துக் கட்சிகளும் புறக்கணித்தன. இதனால்,கர்நாடக அரசு தனிமைப்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு இரண்டாவது முறையாகக் கூடிய கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் காவிரி விவகாரத்தில்எந்த முடிவையும் எடுக்க முதல்வர் கிருஷ்ணாவுக்கு அதிகாரம் அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து தமிழகத்துக்குத் தண்ணீர் விடுவதாக அக் கூட்டத்தில் கிருஷ்ணா தெரிவித்தார். அதை அமைச்சரவை ஆமோதித்தது.
இதைத் தொடர்ந்து இரவில் இருந்தே தண்ணீரைத் திறந்துவிட அதிகாரிகளுக்கு முதல்வர் கிருஷ்ணா உத்தரவிட்டார்.
கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
-->


Click it and Unblock the Notifications
