போலீஸ் கட்டுப்பாட்டில் அணைக்கட்டு, பள்ளிகள் மூடல், ரயில்- பஸ்கள் ரத்து
கிருஷ்ணராஜசாகர் (மைசூர்):
மைசூரில் உள்ள பிரம்மாண்டமான கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டில் இருந்து நேற்று நள்ளிரவு முதல் தமிழகத்துக்குத் தண்ணீர்திறந்துவிடப்பட்டு வருகிறது.
இதையடுத்து அணைக்கட்டைச் சுற்றி மிக பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து மைசூர், மாண்டியா மாவட்டங்களில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து அங்குபள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டதை எதிர்த்து கபினியிலும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டிலும்விவசாயிகளுடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்வி நிலையங்களைஅரசு இம்முறை முன்னெச்சரிக்கையாக மூடியுள்ளது.
மைசூர்- பெங்களூர் இடையிலான ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போல கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகபஸ்கள் இயக்கப்படுவதும் இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மைசூர், மாண்டியா ஆகிய மாவட்டங்களில் 144வது தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலையே 4 கம்பெனிஆயுதப் போலீஸ் படையினர் கிருஷ்ணராஜ சாகரில் நிறுத்தப்பட்டுவிட்டனர்.
அணைக்கட்டை போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தண்ணீரைத் திறந்துவிட்டு வருகின்றனர்.
அணையில் இருந்து எவ்வளவு தண்ணீர் விடப்படுகிறது என்ற விவரத்தை வெளியிட கர்நாடக அரசு அதிகாரிகள்மறுத்துவிட்டனர். ஆனால், தமிழக உளவுப் போலீசாரின் கணக்குப்படி அணையில் இருந்து வினாடிக்கு 2,000 முதல் 4,000 கனஅடி வரை நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இரவில் இருந்து சுமார் 1 டி.எம்.சி. நீர் தமிழகத்துத் திறந்துவிடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதையடுத்து கர்நாடகம் முழுவதுமே ஒருவித பதற்றம் நிலவுகிறது. பெங்களூரில்முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷ்னர் சிங் தெரிவித்தார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications