மிச்சம் மீதி நீரை தமிழகத்துக்குத் தரலாம்: பா.ஜ.க. சொல்கிறது
பெங்களூர்:
காவிரியில் கர்நாடக விவசாயிகளுக்குப் பயன்படுத்தியது போக மிச்சம் மீதி நீரை தமிழகத்துக்குத் தருவதில்எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அம்மாநில பா.ஜ.க. கூறியுள்ளது.
மாநில பா.ஜ.க. தலைவர் பசவராஜ் பாட்டீல் சேடாமும், சட்டசபை பா.ஜ.க. தலைவர் ஜெகதீஷ் ஷெட்டார் இன்றுநிருபர்களிடம் பேசுகையில்,
காவிரி விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே கிருஷ்ணா ஒரு நிலையான முடிவை எடுக்கவில்லை. ஒவ்வொருகட்டத்திலும் மாறி மாறிப் பேசி வருகிறார்.
முதலில் காவிரியில் சிறிது நீர் திறந்துவிட உத்தரவிட்டார். பின்னர் நிறுத்தி வைத்தார். இப்போது மீண்டும் நீர்திறந்துவிடச் சம்மதித்துள்ளார்.
இதனால் மாநில மக்களின் நலன்கள் பாதிக்கப்படுவதோடு, உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கும் ஆளாகியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் ஜெயிலுக்குச் செல்வதற்குக் கூட தயார் என்று கூறிய அவர், பாதயாத்திரை போன்ற அரசியல்நாடகத்தை விவசாயிகள் மத்தியில் நடத்தினார். தற்போது போலீசாரை விட்டு விவசாயிகள் மீதே தடியடி நடத்திக்கொண்டிருக்கிறார்.
தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவே இப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று தமிழகத்திற்கு நீர்திறந்துவிட சம்மதித்துள்ளார்.
நீர் திறந்துவிட முடியாத நிலையில் உள்ளோம் என்று உச்ச நீதிமன்றத்திலோ, காவிரி ஆணையத்திடமோ மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று கொஞ்சம் கூட கிருஷ்ணா நினைக்கவில்லை.
காவிரி விவகாரத்தில் ஒரு முடிவையும் சரியாக எடுக்காத கிருஷ்ணா அரசால் மாநிலத்தின் பெருமையேசீர்குலைந்து விட்டது.
கிருஷ்ணாவின் இந்த முடிவை எதிர்த்து மற்ற எதிர்க் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகியவற்றுடன் பேசி நாங்களும் ஒரு முக்கியமான முடிவை எடுப்போம்.
கர்நாடக விவசாயிகளுக்குப் போக மிச்சம் மீதி இருக்கும் தண்ணீரை தமிழகத்திற்குத் திறந்துவிடுவது குறித்துஎங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் கிடையாது என்று அவர்கள் கூறினர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications