இன்று மாலை வாழப்பாடி ராமமூர்த்தியின் உடல் தகனம்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் இறுதிச் சடங்குகளும் உடல் தகனமும் இன்று மாலைவாழப்பாடியில் நடக்கின்றன.

வாழப்பாடியின் உடல் சென்னையிலிருந்து நேற்று இரவு 7 மணிக்கு சேலம் கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் அங்கிருந்து அவரது வீடு உள்ள அழகாபுரம் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள்பார்வைக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பாக அமைச்சர் சுலோச்சனா சம்பத் ராமமூர்த்தியின் உடலுக்கு மலரஞ்சலிசெலுத்தினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சார்பில முன்னாள் மக்களவை சபாநாயகர் சிவராஜ் பாட்டீல்அஞ்சலி செலுத்தினார்.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரமேஷ் சென்னிதாலா, தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவன் ஆகியோரும் வாழப்பாடியாரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல் பல தொழிற்சங்கத் தலைவர்களும், சேலம் உருக்காலையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானதொழிலாளர்களும் வாழப்பாடி ராமமூர்த்திக்கு மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

முன்னதாக வாழப்பாடியின் உடலுக்கு பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி, திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டிஆறுமுகம் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

வாழப்பாடியாரின் உடலுக்கு அருகில் அவருடைய மனைவியும், மகளும், மகன்களும் சோகமே உருவாகஅமர்ந்திருந்தனர்.

இன்று பிற்பகல் சொந்த ஊரான வாழப்பாடிக்கு ராமமூர்த்தியின் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும். இறுதிச் சடங்கில் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும்பொதுமக்களும் கலந்து கொள்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+