ஸ்டிரைக் செய்யும் அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் சம்பளம் "கட்"

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கான அக்டோபர் மாத சம்பளம் முழுவதையும் தமிழக அரசு "கட்"செய்து விட்டது. தீபாவளி நெருங்கும் நேரத்தில் அரசின் இந்த அதிரடி முடிவால் அரசு ஊழியர்கள் மிகவும்கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23ம் தேதி முதல்காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

ஸ்டிரைக்கை நிறுத்தி விட்டு வந்தால் பேசலாம் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை அரசுஊழியர்கள் புறக்கணித்து விட்டனர்.

இதனால் ஸ்டிரைக் தொடர்ந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் அரசு ஊழியர்களின் வயிற்றில் புளியைக்கரைக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது.

ஸ்டிரைக்கில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அந்த நாட்களுக்குரிய சம்பளம் கொடுக்கப்படாது என்று முதலில் அரசுஅறிவித்திருந்தது. ஆனால் இந்த மாதத்திற்குரிய முழு சம்பளமும் "கட்" செய்யப்படவுள்ளது.

ஸ்டிரைக்கில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அக்டோபர் மாதத்திற்குரிய சம்பளம்வழங்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது. தற்போது அக்டோபர் மாதத்திற்குரிய சம்பள பில், சம்பந்தப்பட்டசம்பளக் கணக்கு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது.

அனைத்துத் துறை உயர் அதிகாரிகளுக்கும் அரசு அனுப்பியுள்ள செய்தியில், யார் யார் ஸ்டிரைக்கில் கலந்துகொண்டு விட்டு வேலைக்கு வராமல் இருக்கிறார்களோ, அவர்களது பெயர் பட்டியலை சம்பளக் கணக்குஅலுவலகத்திற்கு சென்று கொடுத்து அவர்களது சம்பளத்தை நிறுத்தி வைக்க வேண்டும். வேலைக்குவந்தவர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

இதனால், பாதி சம்பளமாவது கிடைக்குமே என்ற நப்பாசையில் இருந்த அரசு ஊழியர்களுக்கு தலையில் இடிவிழுந்தது போல உள்ளது. தீபாவளி வேறு நெருங்கி வருவதால் செலவுக்கு என்ன செய்வது என்ற கவலையும்எழுந்துள்ளது.

அரசின் இந்த நடவடிக்கை மிகவும் அநியாயமானது என்று அரசு ஊழியர்கள் தரப்பில் குமுறுகிறார்கள்.

இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 18 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.ஒழுங்ககாப் பணிக்குச் சென்று கொண்டிருந்த மற்ற அரசு ஊழியர்களைத் தடுத்ததால் அவர்கள் மீதுஇந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+