தேவர் குருபூஜை: மானாமதுரையில் ஜாதிக் கலவரம்- பசும்பொன்னில் போலீசார் குவிப்பு
ராமநாதபுரம்:
பசும்பொன் கிராமத்தில் நாளை நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையையொட்டி (தேவர் பிறந்தநாள்) அங்கு மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று மானாமதுரையில் இருந்து குரு பூஜைக்காக ஜோதியை எடுத்துச் சென்ற ஊர்வலத்தினர் மீதுகல்வீசப்பட்டது. இதையடுத்து அங்கு பெரும் கலவரம் மூண்டது. இரு தரப்பினரும் மிகக் கடுமையாக மோதிக்கொண்டனர்.
முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை நிகழ்ச்சி அவரதுசொந்த ஊரான பசும்பொன்னில் அமைந்துள்ளநினைவிடத்தில் 30ம் தேதி நடக்கிறது. அவரது பிறந்த தினமான அக்டோபர் 30ம் தேதி ஆண்டுதோறும் இந்த விழாநடத்தப்படுகிறது.
வழக்கமாக அவரது சிலைக்கு யார் முதலில் மாலை போடுவது, நிகழ்ச்சியில் யாருக்கும் அதிக முக்கியத்துவம்தருவது என்பதில் முக்குலத்தோர் சமுதாயத்தினருக்குள்ளேயே ஆண்டுதோறும் கோஷ்டி சண்டைகள் நடப்பதுவழக்கம்.
இதில் பெரும் மோதலும் வெடித்து வெட்டு குத்துக்களும் நடந்துள்ளன.
மேலும் இந்த குருபூஜையையொட்டி தலித்களுக்கும் முக்குலத்தோர் சாதியினருக்கும் இடையே மோதலும்வெடிப்பதுண்டு.
இதனால் குருபூஜைக்கு மிக பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மிக பலத்தபாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் மூவேந்தர் முன்ற்ேறக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் சில அதிமுகவினரும் மானாமதுரையில் இருந்துகுருபூஜைக்காக ஜோதியை எடுத்துச் சென்றனர். அவர்கள் தலித்கள் வசிக்கும் பகுதி வழியாகச் சென்றனர்.
இரு பிரிவினருக்கும் எப்போதுமே ஒத்து வராது என்பதால் இந்த வழியே செல்ல வேண்டாம் என தடுத்தும்இவர்கள் அந்த வழியே சென்றதாகத் தெரிகிறது.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சில தலித்களை அதிமுகவினர்தாக்கியதாகவும் இதையடுத்து ஊர்வலத்தில் வந்தவர்களை தலித்கள் கல் வீசித் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.இதனால் பெரும் பதற்றம் உண்டானது.
உடனே போலீசார் ஓடிவந்து இரு தரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர். இச் சம்பவத்தால் அந்தப் பகுதிமுழுவதும் கலவர சூழல் காணப்படுகிறது. அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே குருபூஜை நடக்கவுள்ள தேவரின் சொந்த ஊரான பசும்பொன்னில் மிக பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயக்குமார் கூறுகையில்,
5000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆயுதங்கள், துப்பாக்கிகள்கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செக்போஸ்ட்அமைக்கப்பட்டுள்ளது.
நினைவிடம், புகைப்படக் கண்காட்சி நடைபெறும் இடம் உள்ளிட்ட பல இடங்களில் ரகசிய கேமராக்கள்பொருத்தப்பட்டு கூட்டத்தினர் கண்காணிக்கப்படுவர் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதாவும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சட்டசபைநடப்பதால் அவர் பங்கேற்பது சந்தேகமே என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந் நிலையில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தின் அருகே தலித் தலைவர் ஒருவரின் சிலையைபசும்பொன்னில் நிறுவ வேண்டும் என போராடி வரும் ஜான் பாண்டியன் நாளை அந்த சிலையை நிறுவிபரபரப்பை ஏற்படுத்தி விடுவாரே என்ற அச்சமும் போலீசாரை ஆட்டிப் படைத்து வருகிறது.
இதனால் அவரை போலீசார் கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications