அரிசி விலை உயர்வு: அரசுக்கு எதிரான கண்டன தீர்மானம் ரத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரேசன் அரிசி விலை உயர்வை எதிர்த்து சட்டசபையில் கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானம் எதிர்க் கட்சிகளின்வெளிநடப்பால் ரத்தானது.

தமிழக அரசு சமீபத்தில் ரேஷன் அரிசி விலையை உயர்த்தியது. அதன்படி 10 கிலோவுக்கு மேல் அரிசிவாங்குபவர்கள் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ.6 செலுத்த வேண்டும்.

இந்த அரிசி விலை உயர்வுக்கு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாகஅரசு மீது கண்டனத் தீர்மானம் ஒன்றும் கொண்டுவரப்பட்டது.

இதைத் தொடர்ந்து சட்டசபையில் இது தொடர்பாக அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. ஆனால் இன்றுசட்டசபை தொடங்கிய சிறிது நேரத்திலேயே காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் தன் கட்சிஎம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு வெளிநடப்பு செய்தார்.

எங்களுடைய கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யும் என்ற நம்பிக்கையில் தான் கண்டனத் தீர்மானத்தைக்கொண்டு வந்தோம். ஆனால் எங்கள் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்யாததால் நாங்கள் வெளிநடப்புசெய்கிறோம் என்றார் அவர்.

இதைத் தொடர்ந்து பாமக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் வெளிநடப்புசெய்தனர்.

அதற்குப் பின்னரும் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் நின்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். சிறிதுநேரத்தில் அவர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதற்காகவே காத்திருந்த சபாநாயகர் காளிமுத்து, கண்டனத் தீர்மானத்தை யாருமே வலியுறுத்தாத காரணத்தால்அதை ரத்து செய்கிறேன் என்று கூறினார்.

பின்னர் அரிசி விலை உயர்வு தொடர்பாக ஜெயலலிதா விளக்கமளித்து பேசுகையில்,

இந்தியாவில் எந்த மாநிலத்திலுமே ரேஷன் அரிசியின் குறைந்த விலை ரூ.3.50ஆக நிர்ணயிக்கப்படவில்லை.

பல மாநிலங்களில் குறைந்தபட்சம் ரூ.6 ஆகவும் அதிகபட்சம் ரூ.9 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏழை தமிழக மக்கள் தான் 10 கிலோவுக்குக் குறைவாக அரிசி வாங்குவார்கள்.

அதனால் அவர்கள் பயன் பெறுவதற்காகத் தான் ஒரு கிலோவுக்கு ரூ.3.50 விலை என்று நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+