சட்டசபையில் மதமாற்ற தடை சட்ட மசோதா தாக்கல்: திமுக, பாமக, கம்யூ. எதிர்ப்பு
சென்னை:
பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள கட்டாய மதமாற்றத் தடைச் சட்ட மசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல்செய்யப்பட்டது. இதை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக திமுக, பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தஎம்.எல்.ஏக்கள் கூறினர்.
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை இந்த மாதத் துவக்கத்தில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அறிமுகமானமறுநாளே இந்தச் சட்டத்திற்குப் பெரும் எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்தன.
சிறுபான்மை மதங்களான கிருஸ்து மற்றும் முஸ்லீம் ஆகியவை தான் இந்தச் சட்டத்தைத் தீவிரமாக எதிர்த்தன.
இச்சட்டத்தை எதிர்த்து கடந்த 24ம் தேதி சிறுபான்மை மத அமைப்புகள் அனைத்தும் தமிழகம் முழுவதும்உண்ணாவிரதப் போராட்டம் நடத்தின. அவை நடத்தி வந்த கல்வி நிறுவனங்கள் அன்று மூடப்பட்டதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் திமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் மதமாற்றத் தடைச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்த நிலையில், பாஜகவும் இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துஅமைப்புகள் சிவப்புக் கம்பளம் விரித்து இதை வரவேற்றன.
இந்நிலையில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்ட மசோதா இன்று தமிழக சட்டசபையில தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இந்தச் சட்ட மசோதாவை துவக்க நிலையிலேயே கடுமையாக எதிர்ப்பதாக திமுக, பாமக, இந்தியகம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் கூறினர்.
இதற்கிடையே இம்மசோதாவைத் தவிர வேறு சில சட்ட மசோதாக்களும் இன்று சட்டசபையில் தாக்கல்செய்யப்பட்டன.
Bsimi-96;-96;A nmh 11 ]_UPЦlt;/b>
-->


